Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
"தவமாய் தவமிருந்து" 14 ஆண்டுகள்- மிடில் க்ளாஸ் அப்பாக்களுக்கான படம்

Gossip News - "தவமாய் தவமிருந்து" 14 ஆண்டுகள்- மிடில் க்ளாஸ் அப்பாக்களுக்கான படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

174 Views
தமிழ் சினிமாவின் குடும்ப  சென்ட்டிமென்ட் படங்களில் முக்கியமானது, சேரனின் `தவமாய் தவமிருந்து'. மிகப்பெரிய ஹிட் அடித்த இந்தப் படம், வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

இது தொடர்பாக நடிகர் சேரன் சொன்னபோது, நாம எடுக்குற சினிமா, நம்ம வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமா இருக்கணும்னு நினைப்பேன். அதுக்கான வேட்கைதான் `ஓட்டோகிராப்'. அதற்க்கு பிறகு எடுத்த படம்தான் `தவமாய் தவமிருந்து'. `ஒரு நடுத்தர குடும்பம் 35 வருடத்தைக் கடக்குறதுக்குள்ள என்னவெல்லாம் சந்திக்கிறாங்கன்னு' யோசித்தே படம் எடுத்தேன்.


படம் எடுத்து முடிச்சப்போ, மொத்தம் அஞ்சு மணி நேரமா இருந்தது. எடிட்டிங்கில் மூணு மணிநேரம் இருபது நிமிஷமா கொண்டு வந்தோம். படம் பெருசா இருந்தாலும் ஆடியன்ஸ் கடைசி வரைக்கும் உட்கார்ந்து பார்த்தாங்க. படம் ரிலீஸானப்போ ஒவ்வொரு தியேட்டருக்கும் போனேன். அப்போ அங்கே பெரிய குடும்பம் ஒண்ணு படம் பாத்துட்டு . `படம் முடிஞ்சிருச்சா அதுக்குள்ள'னு ஒரு அம்மா படம் முடிஞ்சவுடனே கேட்டாங்க. எனக்கு ஆச்சர்யமா இருந்தது. இந்தப் படத்தைப் பொருத்த வரைக்கும் எனக்கு கிடைச்ச அங்கீகாரமா அவங்க சொன்ன வார்த்தையைத்தான் பார்க்குறேன்.''

படத்திற்கு ``ரொம்ப வலிமையான பேர் தேவைப்பட்டது. ஒரு அப்பாவுடைய உழைப்பும், அத்தனை கால தவமும், முழு வாழ்க்கையும், படத்தின் பெயரில் இருக்கணும் என தோணுச்சு. அப்பாவைச் சார்ந்து வைக்கலாமா, இல்லை குடும்பம் சார்ந்த பெயரா இருக்கலாமானு ரொம்ப யோசிச்சோம். குழந்தை என்றது எல்லோருடைய வாழ்க்கையிலும் கனவா, ஆசையா இருக்கும். ஒரு பொண்ணுக்கும் ஆணுக்குமான அடையாளமே இதுதான். பெற்றோர் ஆனதுக்குப் பிறகுதான் இந்த உறவே முழுமை அடையுதுனு சொல்லலாம். தவமாய் தவமிருந்துதான் ஒவ்வொரு குழந்தையையும் உருவாக்குவாங்க . அதே மாதிரி பிள்ளைகள் ஏதாவது தப்பு பண்ணிட்டாலும், `இதுக்காகவா உன்னை தவமிருந்து பெத்தேன்'னு சொல்லுவாங்க. இந்த வார்த்தைகளிலிருந்து எடுத்ததுதான் இந்தப் படத்தோட தலைப்பு.

என்னோட படங்களைப் பொறுத்தவரைக்கும் இரண்டு விடயங்களில் ரொம்ப கவனமா இருப்பேன். முதல்ல படத்துல நடிக்கிற கதாபாத்திரங்கள். இரண்டாவது, கதையோட பின்புலம்,எல்லாமே சரியாக பொருந்தீட்டு படத்துக்கு.
புது நிறுவனம்தான் படத்தைத் தயாரிச்சாங்க. படத்துக்காக அவங்க போட்ட காசை எடுத்துட்டாங்க. தவிர, நஷ்டமும் ஏற்படல. தயாரிப்பாளருக்கு தேசிய விருதும் கிடைச்சது.
என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இந்தப் படத்தோட கதை என சொல்ல மாட்டேன். மக்களின் வாழ்க்கையில் உள்ள கதைனு சொல்லலாம். எல்லா மிடில் க்ளாஸ் அப்பாக்களும் படக்கூடிய ஒரு துயரம்தான் இந்த `தவமாய் தவமிருந்து' '' என்கிறார் சேரன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top