Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
தனது தோற்றம் மகளுக்குப் பிடிக்கவில்லை என்கிறார் மீனா - காரணம் என்ன......???

Sooriyan Gossip - தனது தோற்றம் மகளுக்குப் பிடிக்கவில்லை என்கிறார் மீனா - காரணம் என்ன......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,334 Views

தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,   முன்னணி கதாநாயகியாக பல வருடங்கள் ஜொலித்ததுடன், இன்னமும் தனது இருப்பை திரைத்துறையில் தக்கவைத்திருக்கும் ஒரு நடிகை என்றால் அது கண்ணழகி மீனா தான்.


நம்ம 'சூப்பர்ஸ்டார்' ரஜினியுடன் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக "அன்புள்ள ரஜினிகாந்த்" திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை மீனா, 90ம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகுதிகளில் ரஜினியுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து  நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், குறித்த காலப்பகுதியில் முன்னணி வசூல் நட்சத்திரங்களாக விளங்கிய பிரபல கதாநாயக நடிகர்களின் படங்களிலும் அடுத்தடுத்து நடித்து, சக நடிகைகளை பொறாமைப்பட வைத்தவர் இந்த கண்ணழகி.
 
வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் தடம் பதித்ததுடன்  தற்போது இணையத் தொடர்களிலும் மின்னும் எண்ணத்துடன், 'கரோலின் காமாட்சி' எனும் தொடரில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை மீனா, CBI பெண் அதிகாரி பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருக்கின்றார். இந்த இணையத் தொடரை விவேக் குமார் கண்ணன் எனும் இயக்குனர் வெற்றிகரமாக இயக்குகின்றார். இந்தநிலையில், நடிகை மீனாவை சந்தித்த ஊடகத்துறையினரிடமிருந்து எழுந்த கேள்விகளும் கண்ணழகியின் சுவாரஸ்யமான பதில்களும் இங்கே......    
 
'கரோலின் காமாட்சி' தொடரில் உங்களது தோற்றம் வித்தியாசமாக உள்ளதே. இது பற்றி நீங்கள் சொல்வதென்ன..?
 
சினிமாவில் பிசியாக இருக்கும்போது டிவி பக்கம் செல்லவேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் துணிந்து நடித்தேன். இப்போது இணைய தொடர்கள் பிரபலமானதும் அதற்குள்ளும் வந்து இருக்கிறேன். இந்த கதாபாத்திரம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். இதுவரை பார்க்காத மீனாவாக இருக்கவேண்டும் என்று இயக்குனர் விவேக் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை எடுத்து பார்த்துக்கொண்டார். கிளைமாக்சில் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. பொதுவாக ஹீரோக்கள் தான் என்னை படங்களில் காப்பாற்றுவார்கள். இதில் என்னை நானே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலை. எனவே சண்டையிடுகிறேன்.
 
வழக்கத்துக்கு மாறான உங்களது இந்த வித்தியாசமான  தோற்றம் குறித்து, உங்களது செல்ல மகள் நைனிகா எதுவும் சொல்லவில்லையா.....?
நான் முடியை குறைத்து பாப் கட் செய்தது மகளுக்கு பிடிக்கவில்லை.
 
சரி... திரைத்துறையில் இருக்கும் உங்களுக்கு நெருக்கமான நண்பர்களது கருத்து என்ன....?
 
அவர்களுக்கு ஆச்சர்யம். இணையத் தொடர் குறித்து என்னிடம்  நிறைய கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். இதில், எந்தவொரு வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. சினிமாவிற்கும் இதற்கும் வேறுபாடும் இல்லை.
 
இணையத் தொடரில் நடிக்க முதலில் பயந்தீர்களா...? காரணம், இவ்வாறான தொடர்களுக்கு தணிக்கை இல்லை தானே. 
 
உண்மை தான், இந்தத் தொடர்களுக்கு தணிக்கை இல்லை. அதனால் தான் கதை, கதாபாத்திரம் போன்ற விஷயங்களில் நான் அதீத கவனமெடுத்து முற்கூட்டியே எல்லாவற்றையும் தெளிவாக கேட்டுத் தெரிந்துகொண்டதன் பின்னரே நடிக்க வந்தேன். நான் நடிக்கும் இந்தத் தொடரில் கொஞ்சம் கூட ஆபாசம் இருக்காது. திரைப்படங்களோ, தொலைக்காட்சி தொடர்களோ, இணையத் தொடர்களோ எதுவானாலும்
கதை தான் எனக்கு முக்கியம். நல்ல கதையும் எனக்கேற்ற  கதாபாத்திரமும் அமையும் பட்சத்தில் அதில் நடிக்கப் பின்நிற்க மாட்டேன் என்கின்றார் நடிகை மீனா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top