Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
09
6 மாதங்களை எட்டிய பிரம்மாண்ட பேரணி - முதல்முறையாக முறையான அனுமதி கொடுத்த ஹொங்கொங் அரசு

Sooriyan Gossip - 6 மாதங்களை எட்டிய பிரம்மாண்ட பேரணி - முதல்முறையாக முறையான அனுமதி கொடுத்த ஹொங்கொங் அரசுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

308 Views
ஹொங்கொங்கில் அரசுக்கு எதிராக   6 மாதங்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டம் 6 மாதங்களை  கடந்ததை அடுத்து நேற்று பிரமாண்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது. ஹொங்கொங்கில்  கடந்த ஜூன் மாதம் அரசு கொண்டு வந்த கைதிகள் பரிமாற்ற சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஆரம்பமாகியது. 

நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டம் வன்முறையாக மாற்றம் பெற்றது. போராட்டக்காரர்கள் தங்களது அடையாளங்களை மறைத்து முகமூடி அணிந்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்க அரசு முகமூடி அணிந்து போராட்டத்தில் பங்கேற்க தடை விதித்தது. கடும் எதிர்ப்பு நீடித்ததால் சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவை அரசு மீள பெற்றது. எனினும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

6 மாதங்களை கடந்து போராட்டம் நடைபெற்றதை முன்னிட்டு மனித உரிமை முன்னணி என்ற அமைப்பு சார்பில் பிரமாண்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. முதல் முறையாக இந்த பேரணிக்கு அரசு அனுமதி அளித்திருந்தமை குறிப்பிட தக்கது. அதே நேரத்தில் போராட்டத்தின் போது மக்கள் வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று மிக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர். கவுன்சிலர் தேர்தலில் கடும் தோல்வியடைந்த பின்னரும் சீனா மற்றும் தலைவர் மேரி லேம் ஆகியோர் மக்களுக்கு சலுகைகளை வழங்கவில்லை என்று பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர். பேரணி தொடங்குவதற்கு முன்னதாக முதல் நாள் இரவு சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பிஸ்டல் மற்றும் கத்திகளை காவல்துறையினர் பார்வைக்கு வைத்தனர். மேலும் இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top