Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
09
மக்கள் மத்தியில் பிரபலமாக 10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கிவீசிய வாலிபர்!!!

Sooriyan Gossip - மக்கள் மத்தியில் பிரபலமாக 10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கிவீசிய வாலிபர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

505 Views
 மனிதம் இறந்துவிட்டது.  இப்போதெல்லாம் சுயநலத்திற்க்காக மனிதன் செய்யும்  கொடூரங்களை சகித்துக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்த 18 வயதான  ஜோன் டி பிரேவரி  கடந்த ஒகஸ்ட்  மாதம் 4 ஆம் திகதி  லண்டனில் உள்ள டேட் மொடர்ன்   அருங்காட்சியகத்துக்கு சென்றிருந்தார்.  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன்  தனது தாயுடன் அந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தந்திருந்தான். அப்போது ஜோன் டி  திடீரென அந்த 6 வயது சிறுவனை தூக்கிக்கொண்டு அருங்காட்சியகத்தின் மாடியை நோக்கி ஓடியுள்ளார்.   இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவானது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜோன் டி யை  பிடிப்பதற்காக விரட்டி சென்றனர்.

ஆனால் அதற்குள் 10 ஆவது மாடிக்கு சென்ற ஜோன் டி அங்கிருந்து சிறுவனை கீழே தூக்கி எறிந்தான்.இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதற்கிடையே ஜோன் டி யை பொலிஸார்கைது செய்தனர். அவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக லண்டன் நகர நீதிமன்றத்தில் ஜோன் டி அண்மையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது எந்தவித பயமும், கவலையும் இன்றி மாறாக சிரித்துக்கொண்டே தன் மீதான குற்றச்சாட்டை ஜோன் டி ஒப்புகொண்டார். அதுமட்டும் இன்றி, மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காகவே இப்படி செய்ததாக கூறி அனைவரையும் அதிரவைத்துள்ளார்.

இதையடுத்து,ஜோன் டி யை குற்றவாளி என கூறி தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகிற பெப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top