Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
10
யாழ் மற்றும் கிளிநொச்சியில் சூரியகிரகண அவதானிப்பு முகாம்.

SooriyanFM Gossip - யாழ் மற்றும் கிளிநொச்சியில் சூரியகிரகண அவதானிப்பு முகாம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

673 Views
டிசம்பர் 26 ம் திகதி நிகழவுள்ள சூரிய கிரகணத்தை அவதானிக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழம் சூரியகிரகண அவதானிப்பு முகாம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இந்த முகாம்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு வானியல் தொடர்பான பயிற்ச்சிப்பட்டறையை நடாத்தவும், கிரகணத்தின் போது விஞ்ஞான ஆய்வுக்குத் தேவையான அளவீடுகளை மேற்கொள்ளவும் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கிரகணத்தை அவதானிப்பதற்கும் ஓழுங்குகள் மேட்கொள்ளப்பட்டுள்ளன.

பயிற்ச்சிப்பட்டறைக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பல் தேர்வு வினாப் பரீட்சை எதிர்வரும் 13 டிசம்பர் 2019 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு முன்னர், சூரியகிரகணத்தைப் பற்றியும் அதனைப் பாதுகாப்பான முறையில் அவதானிப்பது பற்றியும் விளக்கவுரையுடன் கூடிய காணொளி பரீட்சை மண்டபங்களில் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பரீட்சைக்குத்; தோற்றுவதற்கான பதிவுக்கும், பரீட்சை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள இடங்கள் பற்றிய விபரங்களை அறிவதற்கும் http://event.jfn.ac.lk/eclipse/ எனும் இணையதளத்தினைப் பார்வையிடவும். பதிவினை மேற்கொள்ளாத மாணவர்கள் தமக்கு அண்மித்த பரீட்சை நிலையங்களுக்கு காலை 9 மணி தொடக்கம் 9.30 மணிக்கிடையில் உடனடியாகப் பதிவு செய்தும் பரீட்சைக்குத் தோற்றலாம் என ஒருங்கனைப்புக்குழு இணைப்பாளர் யாழ். பல்கலைகழக பௌதிகவியற்றுறை சிரேஷ்ட பேராசிரியர் பி ரவிராஜன் தெரிவித்துள்ளார்.




சூரியனின் யாழ்ப்பாண நிருபர்
            பிரதீபன்

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top