Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
12
பிரிட்டனை ஆளப்போவது யார்?

SooriyanFM Gossip - பிரிட்டனை ஆளப்போவது யார்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
பிரிட்டனில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே செய்த ஒப்பந்தம் வெற்றியளிக்காததால் தெரசா மே தனது பிரதமர் பதவியில் இருந்து 24-7-2019 அன்று விளக்கியிருந்தார்.

அதன்பின்னர் தற்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க மறுத்ததை அடுத்து அவர் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தார். பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவுக்கு பாராளுமன்றத்துக்கு தொழிலாளர் கட்சி ஒப்புதல் அளித்தது. அதனை தொடர்ந்து டிசம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை இலங்கை நேரப்படி 7 மணிக்கு தொடங்கி இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

அநேகமாக வெள்ளிக்கிழமை அதிகாலை முடிவுகள் தெரிவிக்கப்படும். முடிவுகள் அனைத்தும் வெளியானபின்னர், வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் பக்கிங்காம் அரண்மனையில் ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர வேண்டும். 

பிரச்சார காலத்தின் வெளியான கருத்துகணிப்புகளில், பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சியே தொழிற் கட்சியைவிட கிட்டத்தட்ட 10 புள்ளிகள் அதிகமாக பொதுமக்கள் ஆதரவைப் பெற்று முன்னிலை வகித்ததாக தெரியவந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வெளியான கருத்துக்கணிப்பில், பொரிஸ் ஜோன்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

பிரிட்டன் நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது பொதுத்தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top