Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
12
அவெஞ்சர் படத்தின் வில்லனை போல சித்தரிக்கப்பட்ட அமெரிக்க அதிபரின் வீடியோ

SooriyanFM Gossip - அவெஞ்சர் படத்தின் வில்லனை போல சித்தரிக்கப்பட்ட அமெரிக்க அதிபரின் வீடியோSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

330 Views
சர்ச்சைகளுக்கு அதிகமாக பெயர்போனவர்களில் இவருக்கு முதலிடத்தை கொடுத்துவிடலாம். நாளொரு சர்ச்சை பொழுதொரு தீர்வு என்று நாட்களை மிக சுவாரஸ்யமாக கடத்திச்செல்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ட்ரம்பை காலால் மிதிப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இதன்போது அமெரிக்க அதிபர் கடுமையாக அவரை எச்சரித்தும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே திரைப்படங்களில் வரும் வசனங்களையும், அதில் நடிக்கும் நடிகர்களையும் பார்க்கும்போது நாம் இப்படி நடித்தால் எப்படியிருக்கும் என்று நினைத்து பார்த்துக்கொள்வது வழக்கம். இந்த குணம் சிறுவர்களிடம் அதிகமாகவே இருக்கும். இப்போது அமெரிக்க அதிபரும் அப்படி ஒரு ஆசையில்தான் இருக்கிறார் போலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது அரசியல் எதிரியான ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது உக்ரைனில் விசாரணை நடத்த அந்த நாட்டுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது.


இந்த நிலையில் இது தொடர்பாக ட்ரம்ப் மீது பதவி நீக்க விசாரணை நடத்தி வரும் அமெரிக்க நாடாளுமன்ற புலனாய்வு குழு அவர் மீதான புகார்களை முறைப்படி வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மான நடைமுறையில் இது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை ஆகும். ட்ரம்ப் ஆரம்பத்தில் இருந்து இந்த பதவி நீக்க விசாரணையை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் பதவி நீக்க விசாரணையை நடத்தி வரும் ஜனநாயக கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் ஜனாதிபதி ட்ரம்பை, ஹொலிவூட் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் வில்லன் தானோஸ் போல் சித்தரித்து, ட்ரம்பின் பிரசார குழு வீடியோ ஒன்றை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தானோஸ் உருவில் இருக்கும் ட்ரம்ப் ‘நான் தவிர்க்க முடியாதவன்’ என கூறிவிட்டு சொடக்கு போடுகிறார். அவெஞ்சர்ஸ் படத்தில் வில்லன் தானோஸ் ஒரு சொடக்கில் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதியை அழித்துவிடுவார். அதே போல் ட்ரம்ப் நினைத்தால் ஒரு சொடக்கில் ஜனநாயக கட்சியின் விசாரணையை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top