Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
17
200 கிலோ எடை கொண்ட 2 ஆம் உலகப்போர் வெடிகுண்டு

SooriyanFM Gossip - 200 கிலோ எடை கொண்ட 2 ஆம் உலகப்போர் வெடிகுண்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

396 Views
இத்தாலியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று இத்தாலியின் தெற்கு பகுதியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான பிரிந்தி என்ற இடத்தில் தியேட்டர் ஒன்றை புனரமைக்க  கட்டுமான பணிக்காக குழி தோண்டியபோது வெடிக்காத வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில் அது, 2-ம் உலகப்போரின் போது 1941-ம் ஆண்டு இத்தாலி மீது இங்கிலாந்து வீசிய வெடிகுண்டு என தெரியவந்தது.

இதையடுத்து, 1 மீட்டர் நீளமும், 200 கிலோ எடையையும் கொண்ட அந்த வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க வைக்கும் தீவிர முயற்சியில் இத்தாலி ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,617 மீட்டர் சுற்றளவு பகுதியில் வசிக்கும் சுமார் 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 1,000 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 250-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

அதுமட்டும் இன்றி பிரிந்தி நகரில் உள்ள உள்ளூர் விமான நிலையம், ரயில் நிலையம், 2 மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலை ஆகியவை பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.

முன்னதாக கடந்த 1 ஆம் திகதி இத்தாலியின் துரின் நகரில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதும், சுமார் 10 ஆயிரம் மக்களை வெளியேற்றிவிட்டு ராணுவவீரர்கள் அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top