Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
திண்மக் கழிவகற்றல் செயற்பாடு - தென்மராட்சியில்.....!

Sooriyan Gossip - திண்மக் கழிவகற்றல் செயற்பாடு - தென்மராட்சியில்.....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

559 Views
தென்மராட்சி பிரதேச செயலகத்தினால், ''டெங்கு நோயை கட்டுப்படுத்தல்'' எனும் தொனிப்பொருளில் கிராம மட்ட அலுவலர்கள், கிராம உத்தியோகத்தர்கள்,  சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும்  பொது அமைப்பின் பிரதிநிதிகள் என அனைவரின் ஒத்துழைப்புடனும், நீர் தேங்கும் பொருட்களான திண்மக்  கழிவுகளை அகற்றும் செயற்பாடு இன்று மேற்கொள்ளப்பட்டது. 

டெங்குவை இல்லாது ஒழிக்கும் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்ட இந்த பணிக்கு தேவையான வாகன மற்றும் உழவு இயந்திர உதவிகளை பிரதேச மக்கள் ஆர்வத்துடன் வழங்கி இருந்தார்கள்.

J/288 தொடக்கம் J/347 கிராமம் வரை, சுமார் 60 கிராமங்களில் இந்த திண்மக் கழிவகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/18/aaa.jpg
தென்மராட்சி பிரதேச சபை, நகர சபை இணைந்து இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை திண்மக் கழிவகற்றும் நடவடிக்கையில் அக்கறையுடன் ஈடுபட்டனர்.
 
இன்றைய இந்த செயற்பாடு காரணமாக, தென்மராட்சி கிராமம் மற்றும் நகரம் அதிகளவில் துப்புரவு செய்யப்பட்டுள்ளதாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் சூரியனுக்கு தெரிவித்தனர்.

பொலித்தீன், கண்ணாடிக் கழிவுகள், தகரப் பேணிகள், றப்பர் பொருட்கள் என்பனவே இதன்போது அகற்றப்பட்டுள்ளன.
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/18/ddd.jpg
இதேவேளை, இந்த நடவடிக்கை தென்மராட்சி பிரதேச செயலரின் எண்ணக்கருவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுகாதார வைத்திய பணிமனை, நகரசபை மற்றும் பிரதேச சபை என்பனவற்றின் ஒத்துழைப்புடனும் சிறப்பாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/18/ee.jpg
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/18/ee.jpg
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/18/ff.jpg
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/18/ggg.jpg
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/18/hhh.jpg
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/18/ii.jpg
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top