Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
49 ஊடகவியலாளர்கள் கொலை - 57 பேர் ?

Sooriyan Gossip - 49 ஊடகவியலாளர்கள் கொலை - 57 பேர் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

460 Views
ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 49 ஊடகவியலாளர்கள்  கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐரோப்பிய நாடான பிரான்சின் பரீஸில் இருந்து செயல்படும் ''எல்லைகள் இல்லாத நிருபர்கள்'' என்ற அமைப்பு, 2019ம் ஆண்டுக்கான அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
குறித்த அறிக்கையில், உலகெங்கும் 49 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்கள் யேமன், சிரியா, ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு போர்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கொல்லப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 80 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், போர் இல்லாத இடங்களில் உயிரிழப்பதும் அதிகரித்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
மெக்சிகோவில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது மாத்திரமின்றி கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம் 389 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளைவிட இந்தக் கைதுகள், 12 வீதம் அதிகம். இந்தக் கைதுகள் சீனா, எகிப்து, சவுதி அரேபியாவில் மேற்கொள்ளபட்டுள்ளன.

இதனிடையே, சிரியா, யேமன், ஈராக் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுடன், உலகெங்கும் 57 ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளால் பணையக் கைதியாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top