Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
சிக்கலுக்குள் மாட்டிக்கொள்வாரா 'இசைப்புயல்'.......??? - மறைமுக அரசியல்.

Sooriyan Gossip - சிக்கலுக்குள் மாட்டிக்கொள்வாரா 'இசைப்புயல்'.......??? - மறைமுக அரசியல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

254 Views
இசைத்துறையில் இந்தியாவை உலக அளவிற்கு எடுத்துச் சென்று, ஒஸ்கார் விருதுகள் இரண்டை தனதாக்கியதோடு, அந்த மேடையில் தமிழும், தமிழ்நாடும் பெருமிதமடைய வைத்தவர் 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான்.

தேவையற்ற விடையங்களில் தலையிடுவது, அரசியல் விஷயங்களில் கருத்துக் சொல்வது போன்ற சிக்கலான செயற்பாடுகளில் அகப்படாமல் தனது துறை மீதான முன்னேற்றப்பாடுகொண்ட வேலைகளில் மட்டும் அதீத அக்கறை காட்டும் ஒருவராக இன்றுவரை பார்க்கப்படுபவர் இவர். இதன் காரணமாகவே உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக தற்போதுவரை தன்னை நிலைநிறுத்தியிருக்கின்றார் 'இசைப்புயல்'.

அவரது செயற்பாடுகள் இப்படியிருக்க, ஏ.ஆர். ரஹ்மான் அவ்வப்போது டுவிட்டர் மூலம் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பதிவுகள் மிக விரைவாக இணையத்தில் பரவலடைந்து பெரும்பாலானோரை சென்றடைந்துவிடும்.

அதிலும், ஏ.ஆர்.ரஹ்மானைப் பொறுத்தவரைக்கும் மிக முக்கியமான பதிவுகளை மட்டுமே தனது ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துகொள்வதுண்டு. இருந்தும், பல நூறு தடவைகள் விமானப் பயணம் மேற்கொண்டிருந்தும் இதுவரை அது பற்றிய விஷயங்களை பெரிதாக டுவிட் பண்ணாதவர், முதல் முறையாக தனது விமானப் பயணச்சீட்டை படம் பிடித்து டுவிட்டரில் பகிர்ந்திருக்கின்றார்.

டுவிட் செய்யப்பட்ட அந்த விமானப் பயணச்சீட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் முழுப் பெயரான AL LAHRAKKA/RAHMAN MR என பதியப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியை மட்டும் 'இசைப்புயல்' தனியாக படம் பிடித்து வெளியிட்டிருப்பதன் காரணத்தை பலரும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், மறைமுக அரசியல் சார்ந்த பதிவு இதுவென ஒரு சாரார் கருத்துக் சொல்லவும் ஆரம்பித்துள்ளனர். காரணம், இந்திய மத்திய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதாக ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த செயற்பாடு இருக்கலாம் என்று கதைகள் வெளிக்கிளம்புகின்றன.

அண்மையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை இந்திய மத்திய ஆளும் தரப்பான பாரதிய ஜனதா கட்சி கொண்டுவந்த நிலையில், அதற்கெதிராக முழு இந்திய அளவில் பெருமெடுப்பிலான போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ள சூழலில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் தனது முழுப்பெயருடன் கூடிய விமானப் பயணச்சீட்டை வெளியிட்டமை, மத்திய அரசுடன் முரண்பாட்டை ஏற்படுத்தி அவரை சிக்கலுக்குள் சிக்க வைத்துவிடும் என கவலை கொள்கின்றனர் ஒஸ்கார் நாயகனின் நலன் விரும்பிகள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top