Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை

SooriyanFM Gossip - நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,216 Views
நிர்பயா குற்றவாளிகளுக்கு  தூக்கு தண்டனையை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2012ல் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா மாத்திரமின்றி இலங்கை போன்ற நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
 
இந்தநிலையில், நிர்பயா பலாத்கார கொலை வழக்கு தொடர்பில் வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் அகஷய்குமார் சிங் என்பவர், தூக்கு தண்டனையை விலக்கக் கோரி மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போப்பண்ணா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அக்ஷய்குமார் சிங் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் வாதாடுகையில், நிர்பயா பலாத்கார வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தப்படவில்லை. அக்ஷய்குமார் சிங் அப்பாவி. எங்களது தரப்பு வாதங்களை கேட்கவில்லை. அரசியல் காரணமாக தூக்கில் போடப்படுகிறார். ஊடகம், பொது மக்கள் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக தூக்கில் போட, நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்று வாதாடினார்.

அப்போது நீதிபதி அசோக் பூஷண் கூறுகையில் விசாரணை முடிந்த பின், இவ்வாறு சந்தேகத்திற்கு கொண்டு வருவது ஆபத்தானது எனக்கூறினார். விசாரணை முடிந்த பின்னர், இந்த சீராய்வு மனு மீதான தீர்ப்பை 1 மணிக்கு ஒத்திவைத்தனர்.

பின்னர் நண்பகல் ஒரு மணிக்கு விசாரணை நடைபெற்றபோது, மறு சீராய்வு என்பது மீண்டும் விசாரிப்பது அல்ல. அரிதிலும் அரிதான மனுவாக இதனை கருத முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையையும் இதன்போது நீதிபதிகள் உறுதி செய்தனர்.

ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. எவ்வாறானபோதும், 3 வாரத்திற்குள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பலாம் எனவும் உத்தரவிட்டனர்.

குற்றவாளிகளான ஏனைய 3 பேரின் சீராய்வு மனுக்கள் கடந்த ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top