Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
வைரமுத்து குறித்து வாய் திறக்க மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான் - காரணம் என்ன......???

Sooriyan Gossip - வைரமுத்து குறித்து வாய் திறக்க மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான் - காரணம் என்ன......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

106 Views

ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை உலகளாவிய ரீதியில் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள் அவரது ரசிகர்கள். இந்தநிலையில், தனது இந்த வருடப் பிறந்ததினத்தை இசைத்துறைக்குப் பயனுள்ள ஒன்றாக ஆக்கும் வகையில், 'த பியூச்சர்ஸ்' என்ற கலை அமைப்பு ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்துள்ளார்.


ஏ.ஆர்.ரஹ்மானின் வை.எம்.ஸ்டூடியோ தமிழ்நாடு கும்முடிப்பூண்டியில் அமைந்துள்ளது. குறித்த இசை கலையகத்தில் நேற்றுமுன்தினம் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட 'த பியூச்சர்ஸ்' எனும் ஒருங்கிணைந்த கலை அமைப்பு பற்றிய அறிமுக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த இசைப்புயல், இதற்கான ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தினார்.
 
இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், "தமிழ்நாட்டின் கலாசார வி‌டயங்களை இளம் தலைமுறைக்குக் கொண்டு சென்று சேர்க்கும் வகையில் ‘த பியூச்சர்ஸ்’ என்ற இந்தக் கலை அமைப்பை ஆரம்பித்திருக்கின்றோம். இந்த நவீன யுகத்தில்  குழந்தைகள் யூடியூப் வழியே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளதற்கான வசதி வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன், அவர்கள் நம் கலாச்சாரம், நற்பண்புகளையும் அறிந்துகொள்ள வேண்டும். அதனை நடைமுறைப்படுத்தும் வகையில், எம்ஐரி கல்லூரி இயக்குநர் பரத்பாலாவுடன் இணைந்து இப்பணியில் ஈடுபட உள்ளோம். சமூக வலைதளம் வழியாக மேலும் பலரும் இதில் ஒன்றிணையலாம் என்கிறார் ஒஸ்கார் நாயகன்.
 
அத்துடன், உலக அளவில் தற்போது ஒரு போர்க்கால சூழல் போல எதிர்மறையான எண்ணங்கள் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன. அதை எமது இளம் தலைமுறையினரிடம் சேர விடாமல் தடுக்கும் ஒருவிதையாக இந்த அமைப்பை நினைக்கிறோம். இசை உள்ளிட்ட கலை வடிவங்கள் வழியாக இதை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம் என்றும் கூறினார்.
 
அதேவேளை, ஊடக சந்திப்பில் பங்கேற்ற செய்தியாளர்களின் பல்வேறுபட்ட கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது வெளிவரும் பாடல்கள் பற்றிய விமர்சனங்கள் குறித்து தனது கருத்தை கூறுகையில், "இப்போது பாடல்களில் வரிகள் புரிவதில்லை என்ற கருத்து உள்ளது. நல்ல பாடல்கள் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சில நேரம், நடனம் உள்ளிட்ட வி‌ஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக சில பாடல்கள் உருவாகலாம். அது போன்ற பாடல்களில் வரிகளை விட நடனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்கிறார்.
 
அரசியலில் கலைஞர்கள் தொடர்புபடுவது குறித்து குறிப்பிடுகையில், "அரசியல் நிலைப்பாடுகளில் கலைஞர்கள் எப்போதும் கருத்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது" என்று தன் விளக்கம் கொடுத்த ரஹ்மான், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் பங்கேற்கின்றாரா என்ற கேள்விக்கு பதிலிறுக்கையில், "இயக்குநர் மணிரத்னம் தான் அது குறித்து முடிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும். அந்தப் படத்தில் வைரமுத்து பணியாற்றுவது குறித்து இயக்குனர் மணிரத்னம் படக்குழுவினருடன் கலந்து பேசி ஆலோசனை செய்ய வேண்டும்" என்கின்றார் ஒஸ்கார் நாயகன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top