Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
யாழ். பல்கலைகழகத்தில் ''தமிழமுதம் 2020 ''

Gossip News - யாழ். பல்கலைகழகத்தில் ''தமிழமுதம் 2020 ''Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

648 Views
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகியது தமிழமுதம் 2020. 

படங்கள் இணைப்பு 

ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ''தமிழமுதம்'' நிகழ்வு, இம்முறையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.  
 
அந்தவகையில், “மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்''  என்ற தொனிப் பொருளில், அழகியல் நிகழ்வுகளுடன் அரங்கத்தை நிறைத்த பார்வையார்களுடன் அழகு பெறுகின்றது தமிழமுதம் 2020.http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/08/iiiii.jpg
 
தமிழர் தம் கலாசார – பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து நிகழ்ச்சிகளும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன. 
 
தமிழ் மக்களின் காலாச்சார விழுமியங்களை பட்டை தீட்டும்வகையில், சிலம்பு, கரகம், பொம்மலாட்டம், புலியாட்டம், கம்படி, கரகாட்டம் மற்றும் இன்னியம் போன்ற வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் பிரதான மண்டபத்திற்கு  அழைத்து வரப்பட்டனர்.
 
இந்த வருடத்திற்கான, ''தமிழமுதம் 2020 ''   நிகழ்விற்கு  யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன், முதன்மைவிருந்தினராகக் கலந்து  சிறப்பித்து வருகின்றார். 
 
மேலும், அண்மையில் வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், மற்றும் அரசியல் தலைவர்கள், கலையார்வம் மிக்கவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வை சிறப்பித்து வருகின்றார்கள். 
 
''தமிழமுதம் 2020''  அரங்கில் உள்ள அத்தனை பார்வையாளர்களையும் மிகவும் கவரும் வகையில் நேர்த்தியாக மாணவர்களால் அரங்கேற்றப்பட்டு  வருகின்றன.
 
இந்த நிகழ்வின் மூலம், தமிழர் தம் மரபுகளை கலை கலாசார நிகழ்வுகளை மக்களிடம் இருந்து பிரித்திட முடியாமல் கொண்டு செல்ல உதவும் என்பதே  நிதர்சனம். 

படங்கள் - சூரியன் செய்தியாளர் யாழ் தீபன் 
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/08/ccccccc.jpghttp://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/08/mmmmmmmm.jpghttp://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/08/nnnnnnnn.jpghttp://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/08/ppppp.jpghttp://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/08/qqqqqqqq.jpghttp://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2020Jan/08/bbbbbb.jpg

 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top