Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
இமயமலையில் - தாவரங்கள்

SooriyanFM Gossip - இமயமலையில் - தாவரங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

77 Views
எவரெஸ்ட் மலைப்பகுதி உட்பட இமயமலையின் பல பகுதிகளில் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய ஆராய்ச்சி ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

முன்பு தாவரங்கள் வளராத பகுதிகளில் கூட தற்போது செடிகள் நன்கு வளர்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். செயற்கைகோள் தரவுகளை பயன்படுத்தி 1993ல் இருந்து 2018 வரை, தாவரங்களின் வளர்ச்சி, பசுமையான பகுதிகளிலும் பனி படர்ந்த பகுதிகளிலும் எவ்வாறு இருக்கிறது என்பதை ஓர் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.
 
நாசாவின் லேண்ட் சாட் செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்து, நிலப்பகுதியின் பசுமை தன்மையை மதிப்பிட்டனர்.இதன் மூலம் அனைத்து இடங்களையும் ஒப்பிடுகையில் எவரெஸ்ட் சிகரத்தில், குறிப்பிடத்தக்க அளவில் தாவரங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து இமயமலையின் பனிப்பாறைகள் மற்றும் நீர் அமைப்புகள் தொடர்பாக பணிபுரியும் பிற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் தாவரங்களின் விரிவாக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். ''வெப்பமான மற்றும் ஈரமான பருவ நிலையில் என்ன நடக்குமோ அவ்வாறே இந்த ஆராய்ச்சியின் முடிவுகளும் உள்ளன.ஆகவே இயற்கையாக நிகழும் பருவநிலை மாற்றங்களும் ஆராய்ச்சி முடிவுகளும் பொருந்துகின்றன.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் பனிப் பொழிவு இல்லாத மாதங்களில் தாவரங்கள் வளர நல்ல சூழல் அமைகிறது. மேலும் பனிபொழிவு ஏற்படும் மிக முக்கியமான உயரத்தில் தாவரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.இந்த மாற்றத்திற்கான காரணங்கள் ஆராய்ச்சியில் கண்டறியப்படவில்லை.

இமயமலையின் சுற்றுசூழல் அமைப்பை பொறுத்தவரை பருவநிலை மாற்றத்தால் அங்கு தாவரங்கள் பாதிக்கப்படும் என வேறு ஆராய்ச்சிகள் சில கூறுகின்றன. இமயமலையில் ஒரு காலத்தில் பனிப்பாறைகள் நிறைந்த இடங்களில் கூட தற்போது பசுமையாக செடிகள் வளர்ந்துள்ளன .இமய மலையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வேறு சில விஞ்ஞானிகளும் தாவரங்களின் பரவல் விரிவடைந்திருப்பதைக் காட்டும் பல புகைப்படத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top