Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
திரையிலும் மலரும் நயனின் காதல் - வரவேற்பார்களா ரசிகர்கள்.......???

Sooriyan Gossip - திரையிலும் மலரும் நயனின் காதல் - வரவேற்பார்களா ரசிகர்கள்.......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

787 Views

தமிழ்த் திரையுலகின் கலைஞர்கள் தொட்டு ரசிகர்கள் வரைக்கும் அனைவராலும் உற்றுநோக்கப்படும் காதலும், இந்தக் காதல் கை கூடி கெட்டிமேளம் கொட்ட நீடித்த சந்தோசத்துடன் நிறைந்த வாழ்வு வாழ அனைவரும் ஆசீர்வதிக்கும் காதலுமாக மாறியிருக்கின்றது நயன் - விக்னேஷ் சிவன் காதல்.


காதலை மையமாகக் கொண்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த நயன்தாராவின் வாழ்க்கையில்  பல முறை காதல் பூ மலர்ந்தபோதும், சிறிது காலத்திலேயே வாடி வதங்கி கருகிப்போன வரலாறு தான் இருந்த நிலையில், விக்னேஷ் சிவனுடனான காதல் தற்போது வரை மலர்ந்து சிலிர்க்கின்றது. இந்தநிலையில், இவர்கள் இருவரினதும் காதல் திரையிலும் ரசிகர்களை மகிழ்விக்க படமாக உருவாகுவதாக கோடம்பாக்கத்திலிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.
 
நயன் - விக்னேஷ் சிவன் காதல் கதையை மையப்படுத்திய திரைக்கதையை படமாக உருவாக்கும் இயக்குனர் கோபி, இந்தப் படம் பற்றிக் கூறுகையில், "சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் அரிதானது. அதன் அடிப்படையிலே "நானும் சிங்கிள் தான்" என்ற தலைப்புடன் பெப்ரவரியில் படத்தை திரைக்கு கொண்டுவரும் வேலையில் மும்முரமாகியுள்ளோம்.  தலைப்பு போலவே திரைக்கதையிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.
 
தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். நயன்தாரா மற்றும்  விக்னேஷ் சிவன் ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலர் ஆச்சரியமாகப் பார்க்கும் ஜோடியும் கூட.
 
இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ்சினிமாவில் பெரிய வசூல் வேட்டை நடத்திய படமான அஜித்தின் "பில்லா" படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக "நானும் சிங்கிள் தான்" படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க, காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் இந்தப் படத்தின் கதை. இதற்குள் நயன்-விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும்" என்கின்றார் இயக்குனர் கோபி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top