முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை அதிதி ராவ் தமிழில் சிருங்காரம்,காற்றுவெளியிடை,செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்துள்ளனர்.
நடிப்பு மட்டுமல்லாது பின்னணி பாடகியாகவும் வலம் வரும் அதிதி ராவ், தற்போது இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 24-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் தனியார் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அதிதிராவ், தமிழ் சினிமாவில் தனக்கு சூர்யா, அஜித், விஜய் ஆகிய 3 நடிகர்கள் பிடிக்கும் என்றும் வரிசைப்படுத்தியுள்ளார்.