Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
கடந்த 25 ஆண்டுகளில் உணவில் ஊட்டச்சத்தின் அளவு 40 சதவீதம் குறைந்துள்ளது.

SooriyanFM Gossip - கடந்த 25 ஆண்டுகளில் உணவில் ஊட்டச்சத்தின் அளவு 40 சதவீதம் குறைந்துள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

291 Views
உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் 50 ஆவது  ஆண்டு பொருளாதார உச்சிமாநாடு ஜனவரி 20 ஆம்  திகதி ஆரம்பமாகியது.  

இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சார்பில் 2030-ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 1 இலட்சம் கோடி மரங்கள் நடுவதற்கான புதிய வேலைத்திட்டம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு டாவோஸில் நேற்று நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் கூறியதாவது, பூமியில் உள்ள மண்ணில் 50 முதல் 60 சதவீதத்தை நிழலில் வைத்துக்கொண்டால் தான் சூழலியலை மீளுருவாக்கம் செய்ய முடியும். மண் வளமாக இருக்க மரங்கள் அவசியம். வேளாண்மை நிலங்களில் மரங்கள் இல்லாமல் போனதால் நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு கடந்த 25 ஆண்டுகளில் 40 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இதை சரிசெய்ய பயிர்களுடன் மரங்களையும் சேர்த்து வளர்க்க வேண்டும்.

பயனற்ற இடங்களில் மரங்கள் நடுவதைக்காட்டிலும், விவசாயிகளுக்கு வருமானம் அளிக்கும் விதமாக வேளாண் நிலங்களில் மரங்கள் நட்டு வளர்ப்பது சிறந்தது. உலகளவில் 1.6 பில்லியன் மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இவ்வளவு அதிகமான மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வது நல்லதல்ல. இதை தடுக்க நாம் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவேண்டும். அதில் மிக முக்கியமாக விவசாயிகளை அவர்களின் நிலங்களை பாதுகாக்க செய்ய வேண்டும்.

விளைநிலங்களில் மரங்கள் நீண்டகால பயிராக இருந்து நல்ல இலாபம் தந்தால் கிராம மக்கள் நகரங்களுக்கு செல்லாமல் தடுக்க முடியும். சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்தையும் திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் பொருளாதார வளர்ச்சி மட்டும் தான் நிகழும். சுற்றுச்சூழல் மேம்படாது என குறிப்பிட்டார். மேலும் இவர் இந்த மாநாட்டில் 3 நாட்கள் தியான வகுப்பையும், ‘கொன்சியஸ் ரெட்ரீட்’ என்ற நிகழ்ச்சியையும் நடத்துகிறார் என்பது குறிப்பிட தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top