Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
'மீண்டும் ஒரு மரியாதை'க்கு முதல் மரியாதை செய்வார்களா ரசிகர்கள் - எதிர்பார்ப்பில் திரையுலகம்.

Sooriyan Gossip - 'மீண்டும் ஒரு மரியாதை'க்கு முதல் மரியாதை செய்வார்களா ரசிகர்கள் - எதிர்பார்ப்பில் திரையுலகம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

337 Views

தமிழ்த் திரையுலகிற்கு "முதல் மரியாதை" என்றொரு திரைக்கவியத்தை தந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, தற்போது தானே தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் "மீண்டும் ஒரு மரியாதை".


80களில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இயக்கி வித்தியாசமான கதை கருவில் அமைந்ததாக வெளிவந்து, அந்தக் காலத்தில் திரைப்பட ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை "முதல் மரியாதை" திரைப்படம் பெற்றிருந்த நிலையில், தற்போதைய காலகட்டத்திற்கேற்ப மாற்றுப்பட்ட  கதைக்களத்தில் படமாகியிருக்கும் "மீண்டும் ஒரு மரியாதை" இக்கால ரசிகர்களை கவருமா என்ற கேள்வி திரை விமர்சகர்களிடம் தோன்றியுள்ளது.
 
"முதல் மரியாதை" வெளிவந்த காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரை வானில் பிரபல முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர். அவருக்கென்று ஒரு பெரும் ரசிகர் வட்டம் இருந்தமையும் படத்தின் மிகப்பெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. ஆனால், பிரபல இயக்குனராக அறியப்பட்ட பாரதிராஜா ஒரு நடிகராக ரசிகர்களிடம் சென்றடையவில்லை. இந்தநிலையில், பெப்ரவரி 21ம் திகதி வெளியாகவிருக்கும் "மீண்டும் ஒரு மரியாதை" ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலகத்தினரிடையேயும் ஒரு எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கின்றது.
 
இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படத்தின் விளம்பரப்படுத்தல் வேலைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதில் பாரதிராஜா தானும் பங்கெடுப்பதோடு, அண்மையில் ஊடகத்தினரையும் சந்தித்தார். இதன்போது, "மீண்டும் ஒரு மரியாதை" திரைப்படம் பற்றி அவர் குறிப்பிடுகையில், கிராமத்தில் விவசாயியாக வாழ்கின்ற எழுத்தாளர், முதுமைக்கு காலத்தில் தனது   பிள்ளையுடன் சேர்ந்து வாழ்வதற்காக லண்டன் போகின்றார். லண்டனில் அவர் இருக்கும் காலத்தில், வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி மற்றும் வெறுப்பு காரணமாக தற்கொலை செய்து மரணிக்க நினைக்கும் ஒரு இளம் பெண்ணுடனான சந்திப்பு நிகழ்கின்றது. அதன் பின்னர் என்ன நடக்கின்றது என்பதே இந்தப் படத்தின் கதை என்கிறார் இயக்குனர் இமயம்.
 
அத்துடன், எனது இயக்கத்தில் உருவாகும் படங்களின் கதாநாயகிகள் பற்றி சொல்வதென்றால்  என் கதைக்கு யார் தேவைப்படுகிறார்களோ அவர்களை தான் நடிக்க வைப்பேன். என் கதாநாயகிகள் தேவதை போல இருக்க வேண்டியது இல்லை. குணாதிசயம் தான் ஒருவரை கதாநாயகன், கதாநாயகியாக மாற்றுகிறது. புற அழகு முக்கியம் அல்ல. இந்தப் படத்தின் கதாநாயகி விஷயத்திலும் அதையே தான் நான் கடைப்பிடித்திருக்கின்றேன்" என்கின்றார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top