Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்ட 'சூப்பர்ஸ்டார்' - கலைந்து போகும் அரசியல் கனவு.

Sooriyan Gossip - நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்ட 'சூப்பர்ஸ்டார்' - கலைந்து போகும் அரசியல் கனவு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

707 Views
திரையுலகில் இருக்கும்வரை 'சூப்பர்ஸ்டார்' என்று தலையில் வைத்துக் கொண்டாடப்பட்ட ரஜினிகாந்த், எப்போது தனது தீவிர அரசியல் பிரவேசம் குறித்து பொதுவெளியில் நேரடியாக கருத்து வெளியிட்டாரோ, அன்றிலிருந்து ரஜினி அடிக்கடி  சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளவும் தவறுவதில்லை.
 

ரஜினி எப்போதெல்லாம் கருத்து கூறுகின்றேன் என்று வாயைத் திறப்பாரோ, அவர் கூறும் கருத்தை வைத்தே அவரை சிக்கலுக்குள் தள்ளிவிடுவதற்காக ஒரு குழு அலைந்துகொண்டிருக்க, ரஜினியின் அரசியல் வருகையை விரும்பாதவர்கள் இன்னொரு பக்கம் அவரது அரசியல் கனவை முளையிலேயே கிள்ளி வீசிவிடும் வேலையில் மும்முரமாகியுள்ளனர்.
 
இந்தநிலையில், அண்மையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்து பெரும் பூதாகரமாக மாறி அவரையே நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. ரஜினியின் இந்தக் கருத்துக்கு முதலில் சாதாரண எதிர்ப்பலையே காணப்பட்ட நிலையில், ஊடகங்கள் தொடக்கம் சமூக வலைத்தள பக்கங்கள் வரை பரவிய இந்த விஷயம், மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
 
இந்த விடையம் தொடர்பில் ரஜினியை சந்தித்த ஊடகத்தினர், ரஜினியின் கருத்துக்கெதிராக எழுந்துள்ள எதிர்ப்பு குறித்தும்,  அவர் பக்க நியாயம் என்னவெனவும் வினவியபோது, தனது கருத்து சரியென்றும், அது தொடர்பில் எந்தவித மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கப்போவதில்லை என்றும் ரஜினி தெரிவித்தமையானது,  தீ போன்று மெல்லப் பரவ ஆரம்பித்த இந்த எதிர்ப்பலைக்கு எண்ணெய் ஊற்றுவது போன்று அமைந்துவிட்டது.
 
இதன் பின்னர் பெரியார் ஆதரவாளர்கள் சார்பில் பெருமெடுப்பிலான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதுடன், ஒரு ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் ரஜினிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு அச்சுறுத்தலான பேச்சு பதிவு செய்யப்பட்ட இறுவட்டு ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. அத்துடன், கோவை மற்றும் விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்குரிய காவல்துறை ஆணையாளர்களிடம் ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு மனு கொடுத்துள்ளதுடன்,  ரஜினி ரசிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இது இப்படியிருக்க, மத்திய உளவுத்துறையினர் தமது உளவுத் தகவல் அறிக்கை ஒன்றை இந்திய உள்துறை அமைச்சிற்கு கையளித்துள்ளனர். அதில், ரஜினிக்கு எதிராக ஆரம்பித்திருக்கும் போராட்டத்தால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ரஜினியின் வீட்டிற்கு தமிழ்நாடு மாநில அரசாங்கத்தினால் விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தென்னிந்திய தகவல்கள் சொல்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top