Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
31
திருடனிடம் வேண்டுகோள் விடுக்கும் கேரள ஆசிரியர்கள் - வேகமாகப் பரவும் கோரிக்கை கடிதம்.

Sooriyan Gossip - திருடனிடம் வேண்டுகோள் விடுக்கும் கேரள ஆசிரியர்கள் - வேகமாகப் பரவும் கோரிக்கை கடிதம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

232 Views

திருட்டு என்பது அடுத்தவர்களின் உழைப்பையும் சேமிப்பையும் மட்டுமல்லாமல் சில வேளைகளில் அவர்களது வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டுவந்துவிடும் ஒரு  ஈனத்தனமான செயற்பாடு. களவு கொடுத்தவர்களுக்கு கவலையான விஷயமாக அமைந்தாலும், ஒரு சில திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றபோது நடந்த நிகழ்வுகள் மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாக அமைந்துவிடுகின்றது. 


இந்தியாவின் கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் தலச்சூர் பகுதியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்று 640 மாணவர்களை கொண்டதாக பகுதியளவான அரசாங்க உதவியுடன் இயங்கிவரும் நிலையில், ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 40 பேர் பணியாற்றுகின்றனர். இந்தப் பாடசாலையில்  கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் அதிபரின் அறைக்குள் பூட்டை உடைத்து உள்நுழைந்த இனம்தெரியாத ஒருவர், பாடசாலையின் பாவனைக்கென்று வைத்திருந்த பெறுமதி வாய்ந்த கமரா மற்றும் 40 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றான்.
 
இது தொடர்பில் அந்தப் பாடசாலையின் அதிபரினால் கேரளா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், பாடசாலையில் CCTV கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்ட நிலையில், அண்மையில் மீண்டும் அதிபரின் அறைக்குள் முன்பு போலவே உள்நுழைந்த திருடன் 3 மடிக்கணினிகள், ‘பென் டிரைவ்’ எனப்படும் தரவு சேமிப்புக் கருவி மற்றும் CCTV கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த கணினியின் ‘ஹார்ட் டிஸ்க்’ எனப்படும் பாகத்தையும் களவாடிச் சென்றான்.
 
இந்தநிலையில், திருடன் களவாடிச் சென்ற ‘பென் டிரைவ்’ எனப்படும் தரவு சேமிப்பு கருவியில் தான், பணிக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு இலத்திரனியல் முறையில் பதிவாகும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், CCTV கமரா இணைக்கப்பட்ட கணினியின் 'ஹார்ட் டிஸ்க்'கும் திருடப்பட்டதால், குறித்த மாதத்தில் தாம் பணிக்கு சமூகளித்தமையை ஆசிரியர்களால் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.
 
மீண்டும் இடம்பெற்ற இந்த திருட்டுச் சம்பவம் குறித்து, பாடசாலை அதிபரால் தலச்சேரி காவல்துறையில் மறுபடியும் முறைப்பாடு செய்யப்பட்டதோடு, பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசனை மேற்கொண்டனர். அதன் முடிவில்,சமூக வலைத்தளங்களினூடாக குறித்த திருடனிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது. அதாவது, இரண்டு முறையும் திருட்டில் ஈடுபட்டது ஒரே திருடன் தான் என்றும், அவன் தொழில்நுட்ப அறிவு கொண்டவன் எனவும், ஆகவே கட்டாயம் அவன் சமூகவலைத்தள பாவனையாளனாக இருக்கக்கூடும் என்று ஆசிரியர்கள் முடிவிற்கு வந்ததனால் திருடனுக்கான கோரிக்கைக் கடிதம் ஒன்று எழுதப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
 
இவ்வாறு ஆசிரியர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அந்த கோரிக்கைக் கடிதத்தில், "அன்புள்ள திருடனுக்கு..! நீ யார் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் , மீண்டும் வந்து எங்கள் பாடசாலையில் களவாடியது நீதான். 7 மாதங்களுக்கு முன்பும் களவாடியதுடன், மீண்டும் வந்து உனது கைவரிசையை காட்டிவிட்டாய். இது மோசமான செயல். முதல்முறை திரும்போது 40 ஆயிரம் ரூபா பணத்தோடு, மாணவர்களின் பாவனைக்காக இருந்த கேமராவையும் களவாடிவிட்டாய். இருந்தும், காவல்துறையால் உன்னை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
மீண்டும், நீதான் எமது பாடசாலைக்கு வந்து திருட்டில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று நம்புகின்றோம். CCTV கேமராவில் உனது தோற்றம் மற்றும் செயற்பாடுகள் பதிவாகியிருக்கும் என்பதால் அது இணைக்கப்பட்டிருந்த கணினியின் 'ஹார்ட் டிஸ்க்' உடன், நாம் பணிக்கு சமூகமளிப்பதை வருகைப்பதிவேடு செய்யும் ‘டிஜிட்டல் சிக்னேச்சர்’ அடங்கிய 'பென் டிரைவ்' கருவியையும் கொண்டு சென்று விட்டாய். அதில் உள்ள வருகைப்பதிவை பார்த்துத்தான் எமக்கான சம்பளத்தை தருவார்கள்.
 
'பென் டிரைவ்' கருவியை நீ திருடிச் சென்றதால், எமக்குரிய  இந்த மாத சம்பளம் கிடைக்காது. எங்களது வீட்டுச் செலவுகளுக்கான பணத்துடன், பெரியவர்களுக்கு மருந்து வாங்கவும், வாங்கிய கடனுக்கான வட்டியும் எமது சம்பள பணத்தொகையை நம்பியே உள்ளது. கடனுக்கான தொகையை செலுத்தவில்லையென்றால், மேலதிகமாக  அபராத வட்டி செலுத்தவேண்டி ஏற்படும். எனவே தயவுசெய்து அந்த ‘பென் டிரைவ்’ கருவியை மட்டும் திருப்பி கொண்டு வந்து வைத்துவிடு.
 
மேலும், பாடசாலைகளில் திருடுகின்ற செயற்பாட்டை நிறுத்திவிட்டு, வேறு வேலை செய்து உழைத்து வாழ கற்றுக்கொள். திருட்டு என்பது கேவலமான ஒரு செயற்பாடு. அதனை முடிவிற்கு கொண்டு வா" என்று திருடனிடம்  வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளனர் அந்த ஆசிரியர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top