Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
கும்பாபிஷேகம் கண்டார் தஞ்சை பெருவுடையார் - ஓதுவார் நிகழ்த்திய தமிழ் பூஜை.

Sooriyan Gossip - கும்பாபிஷேகம் கண்டார் தஞ்சை பெருவுடையார் - ஓதுவார் நிகழ்த்திய தமிழ் பூஜை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

82 Views













சோழ சாம்ராஜ்ய பொற்காலத்தின் மிக முக்கியமான மாமன்னராக விளங்கிய சக்கரவர்த்தி ராஜராஜ சோழனால், கருங்கற்களைக்கொண்டு பெரும் கலை நுணுக்கங்களுடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டமைந்ததாக கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து சைவத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் கம்பீரமாக உலகிற்கு எடுத்துச் சொல்கின்றது ராஜராஜேஸ்வர மாதேவன் கோவில் எனப்படும் தஞ்சை பெரும் கோவில்.


216 அடி உயரம் கொண்ட விமான கோபுரத்துடன் கூடியதாக 1010ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்ட இந்த தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோவில் 1997ம் ஆண்டு இறுதியாக குடமுழுக்கு எனப்படும் கும்பாபிஷேகம் கண்ட நிலையில், 23 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் கும்பாபிஷேகத் திருவிழா நடைபெறுகின்றது.  
 
 
216 அடி உயரம் கொண்ட விமான கோபுரத்துடன் கூடியதாக 1010ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்ட இந்த தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோவில் 1997ம் ஆண்டு இறுதியாக குடமுழுக்கு எனப்படும் கும்பாபிஷேகம் கண்ட நிலையில், 23 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் கும்பாபிஷேகத் திருவிழா நடைபெறுகின்றது.
 
2 ஆண்டுகளாக ஆலயத்தின் திருப்பணி வேலைகள் நடைபெற்றுவந்த நிலையில்,  இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் ஆரம்பித்த கும்பாபிஷேகத் திருவிழாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்த அடியார்களின் வருகையுடன் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தப் பணிகளை இந்திய தொல்லியல்துறை மற்றும் இந்துசமய அறநெறி துறையினர் முன்னெடுத்திருந்தனர். 
 
இந்தநிலையில், கடந்த 27ம் திகதி திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், 39½ அடி உயரம் கொண்டதாக உருவாக்கப்பட்ட புதிய கொடிமரம் பிரதிஷடை செய்யப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான ஆரம்ப பூஜைகள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல், கோவில் நிர்வாகத்துறை சார்ந்த அரச அதிகாரிகள் முன்னிலையில், கடந்த 30ம் திகதி கோபுரத்திலுள்ள கலசங்கள் கழற்றப்பட்டு தங்கமுலாம் பூசி மீண்டும் பொருத்தப்பட்டது. 
 
இதற்கிடையே, சமஸ்கிருதத்தில் மட்டுமே கோவில்கள் அனைத்திலும் பூஜை வழிபாடுகளின்போது மந்திரம் ஓதப்படுவது நடைமுறையில் உள்ள நிலையில், இம்முறை
சமஸ்கிருதத்தில் அல்லாது ஓதுவார்கள் எனப்படுவோர் தமிழ்த் தேவார, புராண திருமுறைகள் மற்றும் மந்திரங்களை தமிழில் உச்சாடனம் செய்து தஞ்சைப் பெரும் கோவில் கும்பாபிஷேகத் திருவிழாவை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டபோதும், அதனை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் இரு மொழிகளிலும் பூஜை வழிபாடுகளை நடத்த சம அளவு நேரம் ஒதுக்கி திருவிழாவை நடத்துமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் இம்முறை தமிழ் மொழியிலும் பூஜைகள் நடைபெற்றன.
 
பல்வேறுபட்ட அதிசயங்களோடு சைவத் தமிழர் தம் கலை, கலாச்சார தொன்மையையும், அக்காலத்து பொறியியல் மற்றும் கட்டடக்கலைக்கான சாட்சியாக இன்றும் மிடுக்கோடு நின்று இறையருள் வழங்கும் தஞ்சாவூர் ராஜராஜேஸ்வரம் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகாலம் தமிழர் தம் பெருமையையும் சோழ சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி ராஜராஜ சோழனின் புகழையும் கட்டியம் கூறி நிற்கும் என்றால் மிகையில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top