Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
வருமானவரித்துறை அதிரடியில் சிக்கிய 'தளபதி' விஜய் - இரண்டாவது நாளாகவும் தொடரும் விசாரணை!

Sooriyan Gossip - வருமானவரித்துறை அதிரடியில் சிக்கிய 'தளபதி' விஜய் - இரண்டாவது நாளாகவும் தொடரும் விசாரணை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

936 Views
அட்லீ இயக்கத்தில் 'தளபதி' விஜய் நடிப்பில் உருவாகி அண்மையில் திரைக்கண்ட படம் "பிகில்". ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யத் தவறிவிட்டதால் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடியது.

அட்லீ இயக்கத்தில் 'தளபதி' விஜய் நடிப்பில் உருவாகி அண்மையில் திரைக்கண்ட படம் "பிகில்". ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யத் தவறிவிட்டதால்  கலவையான விமர்சனங்களை பெற்று ஓடியது.
 
தமித் திரையுலக முன்னணி வசூல் நட்சத்திங்களில் ஒருவரான விஜய்யின் "பிகில்" திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும், வசூலை வாரிக் குவிக்கத் தவறவில்லை என்று கோடம்பாக்கத்து தகவல்கள் கூறும் நிலையில், விநியோக மற்றும் தயாரிப்புத் தரப்பு இதைப்பற்றி எந்தவித கருத்துக்களையும் சொல்லவில்லை.
 
இது இப்படியிருக்க, நேற்றையதினம் திடீரென வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கை 'தளபதி'விஜய் வீட்டை நோக்கி பாய்ந்திருக்கின்றது. சென்னை - சாலிகிராமம் நீலாங்கரை பகுதியிலுள்ள வீட்டில் முதலில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதன் பின்னர் பனையூரில் உள்ள விஜய்யின் மற்றுமொரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது.
 
இதேவேளை, இந்த சோதனை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் "மாஸ்டர்" திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கும் 'தளபதி' விஜய்யிடம் நேரடியாக விசாரணை நடத்தும் நோக்கில் படப்பிடிப்புத் தளத்திற்கே சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள், அங்கு நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தியதுடன், மேலதிக விசாரணைக்காக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றதால் படப்பிடிப்பு வேலைகளும் தடைப்பட்டுள்ளன.
 
இது இப்படியிருக்க, "பிகில்" திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனத்தின் மீதும் வருமானவரித்துறையின் கழுக்குப் பார்வை திரும்பியுள்ளது. இதன் காரணமாக, அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 20  இடங்களில் திடீரென சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, "பிகில்' படத்தை தயாரிப்பதற்காக AGS நிறுவனத்துக்கு கடன் வழங்கிய அன்புச்செழியன் என்பவரின் வீட்டிலும், அவரது பல அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தமது அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
 
'சூப்பர்ஸ்டார்' ரஜினி மீது வருமானவரித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்து, அந்த விஷயம் பற்றிய பேச்சு அடங்கமுன், நடிகர் விஜய் வீட்டில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் இரண்டாவது நாளாகவும் தொடரும் நிலையில், என்ன நடக்கின்றது என்ற கேள்வி கோடம்பாக்கத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.   
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top