அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு மே மாதம் மோனிகா மேத்திக்கு சொந்தமான 'ஹேசல்' எனும் நாய் காணாமல் போய் இருக்கிறது.அந்த நாய் மீண்டும் உரிமையாளருடன் இணைய காரணமாக ஆகி இருக்கிறது பியர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆண்டுகளும் கடந்து போயின. சில தினங்களுக்கு முன்பு ஒரு பியர் டின்னில் நாயின் முகம் அச்சடிக்கப்பட்டிருப்பதை சமூக ஊடகங்களில் மோனிகா பார்த்திருக்கிறார்.
ஃபுளோரிடா மாகாணத்தில் மோனிகா வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 1600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பியர் தயாரிப்பு மையத்தில் 'டே டே' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த நாய் இருந்தது. பின்பு அவர்களை தொடர்பு கொண்டு நாயை திரும்ப பெற்றிருக்கிறார். அந்த நாயை பியர் டின்னில் அச்சடிச்சதற்கு காரணம் ஆதரவற்ற நாய்களை யாராவது தத்தெடுப்பதற்காகதான் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.