Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
07
பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் சகோதரர் மர்மமான முறையில் மரணம் - காவல்துறை சொல்வதென்ன.....?????

Sooriyan Gossip - பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் சகோதரர் மர்மமான முறையில் மரணம் - காவல்துறை சொல்வதென்ன.....?????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

106 Views

தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப்பாடகரும் கேரளா மாநிலத்தவருமான கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இளைய சகோதரரான கே.ஜே.ஜஸ்டின் மர்மமான முறையில் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தின் காக்கநாடு பகுதியிலுள்ள ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்த 62வயதான  கே.ஜெ.ஜஸ்டின், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது குடும்பத்தினரால் கேரள காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கேரள காவல்துறையினர், கொச்சி - வல்லார்படம் பிரதேசத்தில் காணப்படும் ஒரு ஆற்றின் கரையோரப் பகுதியிலிருந்து கே.ஜே.ஜஸ்டினின் உடலை கண்டுபிடித்தனர்.

 

தற்போது எர்ணாகுளம் பொதுமருத்துவமனையில் கே.ஜே.ஜஸ்டினின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த மரணம் தொடர்பில் கேரளா - முலவுகாடு காவல் நிலைய அதிகாரியான சுனு தெரிவிக்கையில், 'ஜஸ்டினுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆகவே, கே.ஜே.ஜஸ்டின்  தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்திருக்கக் கூடும் என்று அனுமானித்திருக்கின்றோம். ஆனாலும், அவரது மரணம்  தொடர்பில் சரியான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை' என்கின்றார்.

 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top