Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
10
மீண்டுமொரு புதிய முயற்சி - 'ராப்' பாடலில் கெளதம் வாசுதேவ் மேனன்.

Sooriyan Gossip - மீண்டுமொரு புதிய முயற்சி - 'ராப்' பாடலில் கெளதம் வாசுதேவ் மேனன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

128 Views
தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குனரான கெளதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு தனி ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுவது மறுக்க முடியாத உண்மை. அந்த அளவிற்கு அவரது திரைக்கதை அமைப்பும், காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்து விடும்.
கதாநாயகர்களுக்காக படம் பார்க்க திரையரங்குகளுக்குச் செல்லும் ரசிகர்களுக்கு மத்தியில், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இயக்குனர்களின் படங்களுக்காக மிகப் பெரும் ரசிகர் வட்டம் உண்டு. அப்படியான இயக்குனர்களில் வாசுதேவ் மேனனும் ஒருவர். இப்படியிருக்க, திரைப்படம் இயக்குவதைத் தவிர பாடல் பாடும் திறமையையும் கொண்டுள்ள கெளதம் மேனன், ஒரு சில பாடல்களையும் பாடியிருந்தார். இந்த நிலையில், விரைவில் திரை காணவிருக்கும் "டக்கர்" திரைப்படத்திலும் ஒரு பாடலைப் பாடி, தனது திறமையை வெளிக்காட்டியிருக்கின்றார் கெளதம்.

"நீதானே என் பொன்வசந்தம்", "உப்பு கருவாடு", "பப்பி" ஆகிய திரைப்படங்களில் சில பாடல்களை அவர் பாடியிருந்தாலும், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் "டக்கர்" திரைப்படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலை கெளதம் மேனன் முழுமையாக பாடவில்லை என்பதே இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். காரணம், பிரபல பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் இந்தப் பாடலில் இடம்பெறும் 'ராப்' பகுதியை மட்டுமே பாடி, புதிய முயற்சியில் இறங்கியதுடன் தனது திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தயாரிப்பாளர்களான சுதன் மற்றும் ஜெயராம் ஆகியோர் 'பஷன் ஸ்டுடியோஸ்' சார்பில் இணைந்து தயாரித்திருக்கும் "டக்கர்" திரைப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். நடிகர் சித்தார்த்துடன் ஜோடியாக திவ்யான்ஷா கௌஷிக் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு இரட்டை வேடத்தில் நடித்துள்ளமையும் இந்தப் படத்தின் சிறப்பு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top