Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
இயக்குனர் அவதாரமெடுத்த ரம்யா நம்பீசன் - காதலர் தினத்தன்று முதல் படம்.

Sooriyan Gossip - இயக்குனர் அவதாரமெடுத்த ரம்யா நம்பீசன் - காதலர் தினத்தன்று முதல் படம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

163 Views
2000ம் ஆண்டில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ரம்யா நம்பீசன், தற்போதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்திருப்பதுடன், 20 திரைப்படங்களில் பாடல்களையும் பாடியிருக்கின்றார்.

மலையாளத்தில் "சயனம்" என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போதுவரை நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ரம்யா நம்பீசன் தற்போது தமிழில் விஜய் அண்டனியுடன் "தமிழரசன்", ரியோவுடன் "பிளான் பண்ணி பண்ணனும்" உள்ளிட்ட மேலும் பல படங்களை கைவசமாக்கி தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருக்கின்றார்.

இதுவரை நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் தனது திறமையை வெளிக்காட்டிக்கொண்ட ரம்யா நம்பீசன், இனிவரும் காலங்களில் சிறந்த ஒரு இயக்குனராக தன்னை மெருகேற்றிக்கொள்ளும் முயற்சியிலும் இறங்கியிருக்கின்றார் என்று கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், காதலை மையப்படுத்திய கதைக்கருவில் "அன்ஹைட்" எனும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.

காதலை கதையின் மையக்கருவாகக் கொண்டு படமாக்கியிருக்கும் "அன்ஹைட்" என்ற இந்தக் குறும்படம், எதிர்வரும் 14ம் திகதி திரை காணவிருக்கின்றது.

அதாவது, காதலர்தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதே தினத்தில் இந்த குறும்படத்தை வெளியிட்டால் இளையவர்களிடம் விரைவில் இந்தப் படம் சென்றடையும் என்ற நோக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இயக்குனர் ஆசை மனதில் இருந்தாலும் தற்போதைக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கின்ற முடிவிலேயே நடிகை ரம்யா நம்பீசன் இருப்பதாகவும், பட வாய்ப்புக்கள் குறைய ஆரம்பிக்கும்போது இயக்குனர் திறமையை கையில் எடுக்கவுள்ளதாகவும் கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது.

மல்லுவூட்டில் இருந்து வந்தாலும் தமிழில் "ராமன் தேடிய சீதை", "ஆட்ட நாயகன்", "இளைஞன்", "குள்ளநரி கூட்டம்", "பீட்சா", "ரெண்டாவது படம்", "சேதுபதி", "சீதக்காதி" உட்பட பல படங்களில் ரம்யா நம்பீசன் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top