Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
அருண் காமராஜ் இயக்கத்தில் 'தளபதி 65' ..........??? - கிசுகிசுக்கும் கோடம்பாக்கம்.

Sooriyan Gossip - அருண் காமராஜ் இயக்கத்தில் 'தளபதி 65' ..........??? - கிசுகிசுக்கும் கோடம்பாக்கம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

347 Views
வருமான வரித்துறையினரின் அதிரடியில் சிக்கி அவஸ்தைப் பட்டாலும் தனது படப்பிடிப்பு வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நடிகர் 'தளபதி' விஜய் நேற்றையதினம் நெய்வேலி சுரங்கப்பகுதியில் தனது ரசிகர்களை சந்தித்ததுடன், அவர்களுடன் செல்ஃபி எடுத்தமை நேற்றையதினம் ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக இடம்பிடித்திருந்தது. 

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "மாஸ்டர்" திரைப்படத்தில் நடித்து வரும் 'தளபதி' விஜய், தனது அடுத்த படமான 'தளபதி 65' இல் நடிப்பது பற்றி இதுவரைக்கும் எதனையும் சொல்லாத நிலையில், தளபதியை அடுத்து இயக்கப்போவது யார்..? என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்திருந்தது. இந்தநிலையில், அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்ற ஊகங்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிலையில் 'தளபதி 65' இயக்குனர் அருண் காமராஜ் தான் என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளது.

இயக்குனர் அருண் காமராஜ் இயக்கத்தில் நடிக்க 'தளபதி' விஜய் தீர்மானித்திருப்பதாகவும், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கோடம்பாக்கமிருந்து வரும் செய்திகள் சொல்கின்ற அதேவேளை, 'தளபதி 65' திரைப்படத்திற்கான இசை வழங்கும் பொறுப்பை ஜி.வி.பிரகாஷ்குமார் ஏற்றிருப்பதாகவும் தகவல்கள் மெல்லக் கசிகின்றன.

அத்துடன், 'தளபதியுடன் மட்டும் தங்கச்சியாக நடிக்க மாட்டேன்' என்று கூறி பரபரப்பைக் கிளப்பிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு 'தளபதி 65' திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கச்சியாக நடிப்பதற்கான அழைப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் திரைத்துறை சார்ந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சொல்கின்றன.

இவ்வாறு வெளிவரும் செய்திகளில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது பற்றி, 'தளபதி 65' படம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே தெரியவரும் என்று தென்னிந்திய ஊடகங்கள் சொல்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top