Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
புதிய கோணத்தில் பரவும் கொரோனா

SooriyanFM Gossip - புதிய கோணத்தில் பரவும் கொரோனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

467 Views
சீனாவில் இருந்து  பிரித்தானியாவிற்குச் சென்றிருந்த ஒருவர் மூலம் பலருக்கு கொரோனா தொற்றியுள்ளமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த நபர் கொரோனாவினால் பீடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குறித்த நோயாளிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இவர்கள் மூவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த நபரை சந்தித்த பின், 15 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேறு நோய்த் தொற்றுடன் இருப்பவர்களை கொரோனா எளிதாகத் தாக்கும் என்பதால், அந்த '15 நோயாளிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்' என, பிரித்தானிய சுகாதாரத்துறையினர் சந்தேகம் வெளியிட்டுளார்கள்.

குறித்த 15 பேர் மூலம் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவக் கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது.

இதனால், 15 பேரைக் கண்டறியும் தீவிர முயற்சியில், பிரிட்டன் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய மருத்துவமனைக்கு சீல் வைத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top