Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
விஜய் மல்லையாவை நாடு கடத்தும் தீர்ப்பில் திருப்பம்

SooriyanFM Gossip - விஜய் மல்லையாவை நாடு கடத்தும் தீர்ப்பில் திருப்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

508 Views
விஜய் மல்லையாவை நாடு கடத்தும் தீர்ப்பில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய, 9,000 கோடி இந்திய ரூபாய் கடனை மீண்டும் வழங்காமல், லண்டனில் தலை மறைவாகி வாழ்ந்தது வருகின்றார்.
 
இதையடுத்து, மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், 'விஜய் மல்லயாவை நாடு கடத்த வேண்டும்' என, லண்டன் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கினை வாதாடிய அவரது வழக்கறிஞர், விஜய் மல்லையா, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காகவே வங்கியில் கடன் பெற்றார். அவர் ஏமாற்றும் எண்ணத்தில் கடன் பெறவில்லை. அவர், நள்ளிரவில் தப்பியோடும் அளவிற்கு மோசமானவர் அல்ல; வசதியானவர். அவர், 'பொன்ஸி' திட்டம் போல, மோசடி திட்டத்தை நடத்தவில்லை.மதிப்புமிக்க விமான நிறுவனத்தை நடத்தியவர். பொருளாதார சீர்குலைவால், இதர விமான நிறுவனங்கள் போல, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் நலிவடைந்தது.

அவரை நாடு கடத்த உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் நீதிபதி, அனைத்து சாட்சிகளின் வாதங்களையும் சரிவர ஆராயவில்லை. அவ்வாறு செய்திருந்தால், ஏராளமான குளறுபடிகள் உள்ள தீர்ப்பை வழங்கியிருக்க மாட்டார். சி.பி.ஐ., முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, விஜய் மல்லையா மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுகள் சரியானவையா என, மீண்டும் ஆராய வேண்டி உள்ளது.

எனவே, சரிவர ஆராயாமல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய குளறுபடி தீர்ப்புக்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top