Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
தற்கொலை செய்து கொண்ட நடிகை - பட வாய்ப்பின்மையால் சோகம்.

Sooriyan Gossip - தற்கொலை செய்து கொண்ட நடிகை - பட வாய்ப்பின்மையால் சோகம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

136 Views
திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி, கவலையை ஏற்படுத்தத் தவறுவதில்லை. பொதுவாக, மன உளைச்சல் காரணமாகவே இப்படியான சம்பவங்கள் பதிவாகின்றன.
திரைத்துறையில் முதலீடு செய்யும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தொடக்கம் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் வரைக்கும் நீளும் இந்த தற்கொலைப் பட்டியல், கடன் சுமை தொடக்கம் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு காரணங்களால் உண்டான விரக்தி மனநிலையே இப்படியான மரணங்களுக்கான காரணம் என்றும் பதிவு செய்கின்றது.

இப்படியான ஒரு கவலை தரும் தற்கொலை மரணம் மீண்டும் திரைத்துறையில் நிகழ்ந்திருக்கின்றது. ஆனால், தென்னிந்தியத் திரைத்துறையில் அல்ல. மாறாக, பெங்காலி மொழியில் நடித்து வரும் நடிகை ஒருவரே தனது மரணத்தின் மூலம் தற்கொலையை தடுத்து நிறுத்துவதற்கான தேவையை திரும்பவும் உணர்த்திச் சென்றுள்ளார். பெங்காலி மொழியில் உருவாகும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் சுபர்ணா ஜாஷ் என்ற நடிகையே மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார்.

பெங்காலி மொழியில் உருவாகி அண்மையில் திரை கண்ட "மயூர்பங்கி" என்ற திரைப்படத்தில் வாய்ப்புக் கிடைத்து நடிகை சுபர்ணா ஜாஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தின் பின்னர் தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற கனவிலும் நடிகை சுபர்ணா ஜாஷ் மூழ்கியிருந்தார். இருந்தும், "மயூர்பங்கி" படத்திற்குப் பின்னர் எந்தவித பட வாய்ப்புகளும் தேடி வரவில்லை.

வாய்ப்புக்களுக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த நடிகை சுபர்ணா ஜாஷ், மன அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வட இந்திய செய்திகள் சொல்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top