Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
முடிவுக்கு வருகின்றது திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் வழக்கு.....????

Sooriyan Gossip - முடிவுக்கு வருகின்றது திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் வழக்கு.....????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

179 Views
நீண்ட இழுபறிக்கு மத்தியில் இன்னமும் தொடரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை தெரிவு செய்யும் தேர்தலும், அது தொடர்பான வழக்கு மற்றும் முரண்பாடுகளும் வெகு விரைவில் முடிவுக்கு வரும் சாதகநிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதியுடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், புதிய நிர்வாகிகள் தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், நீதிமன்றம் வரை சென்ற இந்த விஷயம் வழக்காக பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை விசாரணைகள் நடைபெறுகின்றன.

இருந்தும் சங்கத்தின் நிர்வாகப் பணிகள் தடையின்றி நடைபெற தமிழ்நாடு மாநில அரசின் சார்பில் வணிகவரித்துறை தனது உத்தியோகத்தர் ஒருவரை சங்கத்தின் நிர்வாக அதிகாரியாக நியமித்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவர் பதவி உயர்வு பெற்று பணி இடமாற்றம் சென்ற நிலையில், மற்றொருவரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும், முதலாவதாக நியமிக்கப்பட்ட அதிகாரியின் நியமனத்திற்கு எதிராக, தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த நடிகர் விஷால் உயர் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு மாநில அரசு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாக சிறப்பு அதிகாரியின் பதவிகாலம் மார்ச் மாதம் முடிவடைவதால் மேலும் ஒருவருடத்திற்கு புதிய சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த விஷால் தரப்பு சட்டத்தரணி, தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரியின் பதவிக்காலம் மார்ச் மாதம் நிறைவடைவதால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வாதிட்டார். அத்துடன், தமிழக அரசு மேலும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டத்திற்கு விரோதமானது என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த உயர்நீதிர்மன்ற நீதிபதி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தமிழக மாநில அரசு நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பில் தமிழக அரசு சார்பாக நேற்றையதினம் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்ததை அடுத்து, நடிகர் விஷால் தனது வழக்கை மீள பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம், நீண்ட இழுபறியில் இருந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த வழி பிறந்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top