Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
14
8வது உலக அதிசயமாக போகும் கோவில்....

Gossip News - 8வது உலக அதிசயமாக போகும் கோவில்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,768 Views
உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிகள்,நடைபெற்று வருகின்றன.மன்னர் ராஜராஜ சோழன், தன் 25வது ஆட்சியாண்டில், கி.பி 1003ல் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டத் துவங்கி, 1010ல் கட்டுமானத்தை நிறைவு செய்தார்.
கருங்கற்களால், 216 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட இந்த கோவில் கோபுரத்தில், கலச வடிவிலான மேற்கூரை, 80 டன்னில், ஒற்றை கல்லால் செய்யப்பட்டது. தமிழர் கட்டடக்கலைக்கு எடுத்துகாட்டாக விளக்குகிறது.கடந்த, 1987ம் ஆண்டு, 'யுனெஸ்கோ' என்ற ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், உலகப் பாரம்பரியச் சின்னமாக, தஞ்சை பெரிய கோவில் அறிவிக்கப்பட்டது. இக்கோவிலை காண, உலகம் முழுவதில் இருந்தும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், உலக அதிசய பட்டியலில், எட்டாவது இடத்தில், இக்கோவிலை இடம் பெற செய்ய, தஞ்சையைச் சேர்ந்த இன்ஜினியர்கள், டாக்டர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும் இணைந்து, ஒருங்கிணைப்பு குழுவை துவங்கி, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், சர்வதேச அளவில் உள்ள தமிழர்களிடையே, கையெழுத்து இயக்கம் நடத்தவும், இக்குழு திட்டமிட்டுள்ளது.இக்கோவில் கட்டுமானம் முதல், சிற்பங்கள் வரை, அனைத்தும் அதிசயமானது.

உலக அதிசயத்தில், தஞ்சை கோவில் இடம்பெற, தமிழகம் மட்டு மின்றி, சர்வதேச அளவில், தமிழர்கள் ஒருங்கிணைத்து, 'ஓன்லைன்'வாக்கெடுப்பை நடத்த உள்ளதாகவும் அதன்பின், உலக அதிசய குழுவை, கோவிலுக்கு அழைத்து வந்து பார்வையிட செய்து. உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரிய கோவிலை இடம்பெறச் செய்யும் பணிகள் முன்னெடுக்கபட உள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top