Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
17
கொஞ்சம் கொஞ்சமாக உயிர் தான் போகின்றது என்கிறார் வசந்தபாலன் - 'ஜெயில்' கொடுக்கும் அவஸ்தை

Sooriyan Gossip - கொஞ்சம் கொஞ்சமாக உயிர் தான் போகின்றது என்கிறார் வசந்தபாலன் - 'ஜெயில்' கொடுக்கும் அவஸ்தைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

290 Views
தமிழ்த் திரைத்துறையில் தனித்துவ அடையாளம் கொண்ட ஒரு சில இயக்குனர்களில் வசந்தபாலனும் ஒருவர். தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் என்று வர்ணிக்கப்படும் இயக்குனர் சங்கரின் பாசறையில் புடம்போடப்பட்ட ஒரு தங்கம் என்றால் மிகையில்லை.
"வெயில்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தடம் பதித்த வசந்தபாலன், அந்த ஒரே ஒரு படத்தின் மூலம் தனது இருப்பை வெளிச்சப்படுத்தியதுடன், பெரும் ரசிகர் வட்டத்தையும் தனதாக்கிக்கொண்டவர். "வெயில்" படத்தில் இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமார், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் என இவர் அமைத்த கூட்டணி மிக்கது தரமான தேர்வு.

அதேபோன்று, "அங்காடித் தெரு" என்ற படத்தைத் தந்து, தமிழ்நாடு - சென்னையின் மிகப் பிரபலமிக்க வணிகப் பகுதிகளான தியாகராய நகர், அண்ணா நகர் பகுதிகளிலுள்ள விற்பனை அங்காடிகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வையும் வலிகளையும் அப்படியே கண்முன்னே வரவைத்து, சில உண்மைகளை எல்லோரும் அறியும்படி செய்ததன் மூலம் உயர்ந்து நின்றவர்.

இப்படி தரமான படங்களைத் தந்த இயக்குனர் வசந்தபாலன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் "ஜெயில்". பல சிரமங்களைக் கடந்து இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கும் வசந்தபாலன், தனது "ஜெயில்" படத்தை வெளியிடுவதில் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்குவதாக கோடம்பாக்க செய்திகள் சொல்கின்றன.

"ஜெயில்" படத்தினால் தான் எதிர்நோக்கும் அவஸ்தை பற்றி இயக்குனர் வசந்தப்பாலன் குறிப்பிடுகையில், "திரைப்படம் ஒன்றை உருவாக்குவதற்காக தயாரிப்பாளர் ஒருவரை பிடிக்கிறதுக்கு தலைகீழாக நிக்கணும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு அதைவிட தலைகீழா நடக்கணும். ஷூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கணும். இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம். ஆனால் எடுத்த படத்தை வெளியீடு செய்ய உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது" என சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றினூடாக தனது வேதனையை பகிர்ந்திருக்கின்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top