Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
18
லொரியஸ் விருதுக்கு பொருத்தமானவரா சச்சின்....?

Sooriyan Gossip - லொரியஸ் விருதுக்கு பொருத்தமானவரா சச்சின்....?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

263 Views
உலகளாவிய ரீதியில் ஒட்டுமொத்த விளையாட்டுத் துறைகளிலுமுள்ள தனித்துவமிக்க சிறந்த வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற மிகப் பெருமைமிக்க லாரியஸ் விருது விழா ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் நேற்றையதினம் நடைபெற்றது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் லொரியஸ் விருது வழங்கப்பட்டுவரும் நிலையில், 2020ம் ஆண்டிற்கான விருது நிகழ்வில் உதைபந்தாட்டம், கிரிக்கெட், கார் ஓட்டப் பந்தயம், ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்தாட்டம், ரக்பி ஆகிய விளையாட்டுப் பிரிவுகளில் ஜொலித்த நட்சத்திரங்களுக்கே விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருது விழாவில் உலக அளவில் தனக்கான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள உதைபந்தாட்ட நட்சத்திரமான மெஸ்ஸி மற்றும் பெர்முலா கார் பந்தயத்தில் 6 முறை முதலிடம் பிடித்தவரான ஹமில்டன் ஆகியோருக்கு, சிறந்த வீரருக்கான விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கிரிக்கெட் விளையாட்டின் சாதனை வீரருக்கான விருதை இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான
சச்சின் டெண்டுல்கர் தனதாக்கியுள்ளார். சச்சினுக்கான இந்த
லொரியஸ் விருதானது, 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சச்சின் பங்கெடுத்திருந்த நிலையில், மகேந்திர சிங் தோணி தலைமையில் உலகக்கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது. இந்த வேளையில், சச்சின் டெண்டுல்கரை அணியின் வீரர்கள் தமது தோள்களில் சுமந்து சென்ற நிகழ்வானது இந்த லாரியஸ் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இந்த விருதானது சச்சின் வசமானது.

இந்த லொரியஸ் விருது தன் வசமானமை தொடர்பில் சச்சின் கருத்து தெரிவிக்கையில், “இந்த உறவு மிகவும் உன்னதமானது. உலகக் கிண்ணத்தை நாம் வென்றபோது இருந்த மனஉணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அந்தவேளையில் முழு இந்தியாவும் சிறப்புமிக்க அந்தத் தருணத்தை கொண்டாடி மகிழ்ந்தது" என்று குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top