Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
20
படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் உயிர் தப்பிய கமல் - மூவர் பலி.

Sooriyan Gossip - படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் உயிர் தப்பிய கமல் - மூவர் பலி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

205 Views
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து உருவாக்கும் திரைப்படம் "இந்தியன் 2"
ஏற்கனவே கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த இந்தியன் திரைப்படத்தின் அடுத்த பாகமாக வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், பெரும் பாதிப்பு ஒன்றை சந்தித்துள்ளது கமல் உட்பட்ட படக்குழு.

சென்னை - பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்குப் பூங்கா பகுதியில் நேற்றையதினம் "இந்தியன் 2" படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் காட்சி அமைப்புக்குத் தேவையான வகையில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெறும் நிலையில், படப்பிடிப்பிற்குத் தேவையான ஒளி அமைப்பை திறம்பட வழங்க பல அடி உயரமான ராட்சத பாரந்தூக்கி ஒன்றில் விசேட மின்விளக்குகளைப் பொருத்தப்பட்டிருந்தன.

நேற்றையதினம் மாலைவேளையில் நடிகர் கமல் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோருடன் துணை நடிகர்கள் பலரும் பங்கேற்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது, யாரும் எதிர்பாராத வகையில், மின்விளக்குகள் பொருத்தப்பட்ட குறித்த பாரந்தூக்கி சரிந்து வீழ்ந்தது. இதன்போது, பாரந்தூக்கியின் முன்பகுதி எட்டும் தூரத்திலிருந்து படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணாவும், ஊழியர்களான மது, சந்திரன் ஆகியோர் பாரந்தூக்கியில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே பலியாகினர்.

மேலும் ஒரு பெண் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக "இந்தியன் 2" படப்பிடிப்பு அந்த நிமிடமே நிறுத்தப்பட்டதுடன், காயமடைந்தவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல படக்குழுவினர் செயற்பட்டபோது நடிகர் கமல் ஹாசனும் அவர்களோடு இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும் கோடம்பாக்கம் சொல்கின்றது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top