Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
20
ரீமிக்ஸ் என்றாலே கடுப்பாகும் இசைப்புயல் - 'முக்காலா' பற்றி சொல்வது என்ன.....?

Sooriyan Gossip - ரீமிக்ஸ் என்றாலே கடுப்பாகும் இசைப்புயல் - 'முக்காலா' பற்றி சொல்வது என்ன.....?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

209 Views
இந்திய அளவில் இசையில் புதுமை செய்து தமிழுக்கும் பெருமை சேர்த்த இசையமைப்பாளர் 'இசைப்புயல்' ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசையில் உருவான "முக்காலா" பாடலை ரீமிக்ஸ் செய்வதற்கு அனுமதித்தமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இசையில் பல நுணுக்கங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி புதுமை செய்த ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த பல திரையிசைப் பாடல்களை தந்து 'இசைப் புயல்' ஆக பெருமை பெற்று நிற்கின்ற நிலையில், இரண்டு ஒஸ்கார் விருதுகளையும் தனதாக்கிக் கொண்டார். இத்தனை இருந்தும், தனக்கு முந்தய இசையமைப்பாளர்களின் பழைய பாடல்களை மீளுருவாக்கம் செய்வதில் விருப்பமும், அவ்வளவு ஈடுபாடும் இல்லாதவர் ஏ.ஆர்.ரஹ்மான். காரணம், பாடல்கள் உருவாக்கப்பட்டபோது இருந்த அதே தனித்துவத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்பதே.

இந்த நிலையில், "காதலன்" திரைப்படத்துக்காக தனது இசையில் வெளிவந்த 'முக்காலா' பாடலை புதிய முறையிலான நடன அமைப்பிற்கு ஏற்றவாறு "ஸ்ட்ரீட் டான்சர்" திரைப்படத்திற்காக ஹிந்தியில் மீளுருவாக்கம் செய்வதற்கு, நடிகர் பிரபுதேவாவிற்கு அனுமதி கொடுத்திருந்தார் 'இசைப்புயல்.' இந்த விடையம் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டபோது, "2017ம் ஆண்டு பொலிவூட்டில் வெளியான "ஓகே ஜானு’ படத்தில் இடம் பெற்ற ‘ஹம்மா ஹம்மா’ என்ற பாடல் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதன் பிறகு ரீமேக் செய்யப்பட்ட எந்தப் பாடலும் எனக்குப் பிடிக்கவில்லை. ரீமேக் செய்யப்பட்ட சில பாடல்கள் மிகவும் மோசமாகவும் என்னை எரிச்சலூட்டுவனவாகவும் இருந்தன.

நான், 'முக்காலா' ரீமேக் பாடலை உருவாக்கிய நிறுவனத்தை அழைத்து, “இதற்கு ஆதரவு தெரிவிக்கச் சொல்லி நீங்கள் என்னை வற்புறுத்துகிறீர்கள். ஆனால், இந்தப் பாடலை நான் வெறுக்கிறேன். இதை நான் ஆதரித்தால் மக்கள் என்னைக் கிண்டல் செய்வார்கள். ரீமிக்ஸ் டிரெண்ட் இப்போது முடிந்துவிட்டது என கூறினேன்" என கடுப்புடன் பதில் வழங்கியுள்ளார் 'மெட்றாஸ் மொஸார்ட்'.

இது இப்படியிருக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு காலகட்டத்தில் பழைய பாடலை ரீமிக்ஸ் செய்ய வேண்டியதொரு கட்டாயத்தை எதிர்கொண்டவர் தான். எஸ்.ஜெ.சூர்யா நடிப்பில் வெளிவந்த "நியூ" திரைப்படத்திற்காக 'தொட்டால் பூ மலரும்' என்ற பாடலை மீளுருவாக்கம் செய்திருந்தார். அந்தப் பாடலின் மூல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன், இசைப்புயல் மீளுருவாக்கிய அந்தப் பாடலைக் கேட்டதும், தனது பாடலின் உயிரோட்டத்தை கெடுக்காமல் இருந்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு MSV நன்றி பாராட்டியமையை குறிப்பிடலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top