Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
21
வழக்கில் சிக்கிக்கொண்ட லைக்கா நிறுவனம் - 'இந்தியன் 2' விபத்து.

Sooriyan Gossip - வழக்கில் சிக்கிக்கொண்ட லைக்கா நிறுவனம் - 'இந்தியன் 2' விபத்து.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,069 Views
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கமல் ஹாசன் நடிக்க சங்கர் இயக்கத்தில் உருவாகின்றது "இந்தியன் 2" திரைப்படம். இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலைப்பொழுதில் நடந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பில், லைக்கா நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
மாலைப்பொழுது என்பதால் படப்பிடிப்பிற்குத் தேவையான வெளிச்சத்தை வழங்க, பாரிய பாரம்தூக்கி ஒன்றில் மின்விளக்குகளைப் பொருத்தி ஒளி அமைப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், திடீரென சரிந்து வீழ்ந்த பாரம்தூக்கியில் சிக்குண்டு மூவர் பலியானதுடன் 9 பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில், "இந்தியன் 2" திரைப்படத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றிய குமார் என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தயாரிப்புத் தரப்பான லைக்கா நிறுவனத்தின் மீது, இந்திய நீதித்துறை சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் சென்னை - நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன், பாரம்தூக்கியின் உரிமையாளர், தயாரிப்பு முகாமையாளர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை, உயிரிழந்த உதவி இயக்குனர் கிருஸ்ணா, காலை உதவி உயக்குனர் சந்திரன் மற்றும் உதவியாளர் மது ஆகியோரின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் ஹாசன் தன் சார்பில் தலா ஒரு கோடி இந்திய ரூபாவை வழங்கவிருப்பதாக அறிவித்திருப்பதோடு, உயிர் நீத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருக்கின்றார்.

இது இப்படியிருக்க, "இந்தியன் 2" திரைப்படத்தின் தயாரிப்புத் தரப்பான லைக்கா நிறுவனம், தம் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 50 லட்சம் இந்திய ரூபாவை வழங்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top