நாள் ஒன்றிக்கு 10,000 அடி நடந்தாலும், உடல் எடை அதிகரிப்பை தடுக்க இயலாது என அமெரிக்க ஆய்வு ஒன்று அடித்துக் கூறுகின்றது.
அமெரிக்காவில் உள்ள பிரிஹாம் யங் பல்கலைகழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
அங்கு கல்வி கற்கும் 120 மாணவர்களை ஆறு மாதத்திற்கு இந்த ஆய்விற்கு பயன்படுத்தி இருக்கின்றார்கள்.
குறித்த மாணவர்கள் நாள் முழுவதும் எத்தனை அடிகள் நடக்கின்றனர் என்பதை துல்லியமாக கணக்கிட, ஒவ்வொருவரும் 24 மணி நேரம் 'பீடோமீட்டர்' அணிந்திருந்தனர். சராசரியாக 11,066 அடிகள் நடந்தனர். வாரத்துக்கு 6 நாட்கள் என மொத்தம் 24 வாரங்கள் நடந்தனர்.
சோதனை நாட்களில் இவர்கள் தினமும் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் நிறை என்பன கண்காணிக்கப்பட்டன. நடக்காத நேரங்களில் மற்ற வேலைகளுக்காக உட்கார்ந்திருக்கும் கால அவகாசமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 10,000 அடிகளுக்கு மேலாக நடந்தவர்களுக்கு உடல் எடை, கொழுப்பு அதிகரிப்பு குறைக்குமா என ஆய்ந்தனர்.
இந்த ஆய்வின் இறுதியில் 15,000 அடிகள் நடந்தால் கூட, அவர்களின் உடல் கூறியது அதிகரித்ததை ஆய்வாளர்கள் கணிப்பிட்டார்கள்.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆறு மாதத்தில் சராசரியாக 1.5 கிலோ வரை நிறைஅதிகரித்தது தெரியவந்தது.
இந்த ஆய்வின் மூலம் நடப்பதை தவிர, சரிவிகித உணவு, அமைதியான மனநிலை உட்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதான் உடல் எடை குறையும் என்று கூறப்படுகின்றது.