Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
24
துப்பறிவாளனை கைவிட்ட மிஸ்கின் - இயக்குனர் ஆகிறார் விஷால்......???

Sooriyan Gossip - துப்பறிவாளனை கைவிட்ட மிஸ்கின் - இயக்குனர் ஆகிறார் விஷால்......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

277 Views
இயக்குனர் மிஸ்கின் - விஷால் கூட்டணியில் திரை கண்டு 'சூப்பர்ஹிட்' அடித்த திரைப்படம் "துப்பறிவாளன்". இந்தப் படத்தின் கதை மற்றும் காட்சியமைப்பு என்பன ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால், வசூலிலும் கல்லா கட்டத் தவறவில்லை "துப்பறிவாளன்". இதனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இதன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கு பின்நிற்கவில்லை.
இந்தநிலையில், இயக்குனர் மிஸ்கின் படமாக்க ஆரம்பித்த "துப்பறிவாளன் 2" படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்துள்ளது. இந்த வெளிநாட்டுப் படப்பிடிப்பில் நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி ஆகியோர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதுடன், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

இது இப்படியிருக்க, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் உருவான "சைக்கோ" திரைப்படம் அண்மையில் வெளிவந்து 'ஹிட்' அடித்ததால் இயக்குனர் மிஸ்கின் பெயர் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட இயக்குனர் மிஸ்கின், 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என தனது சம்பளத்தை உயர்த்திக்கொண்டார்.

"துப்பறிவாளன் 2" படத்திற்கான ஒப்பந்தம் "சைக்கோ" திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அந்தவேளையில் தந்து சம்பள அதிகரிப்பை பற்றிப் பேசாத மிஸ்கின், "சைக்கோ" படத்தின் வெற்றிக்குப் பின்னர் "துப்பறிவாளன் 2" படத்திற்காக திடீரென தனது சம்பளத்தை அதிகரித்துக் கேட்டதனால் குழப்பமடைந்த தயாரிப்புத் தரப்பு அதற்கு உடன்பட மறுத்தது. இந்தநிலையில், தனது இயக்கத்தில் படமாகிக்கொண்டிருக்கும் "துப்பறிவாளன் 2" படத்தை இடைநடுவில் கைவிடுவதாகவும், படத்தை இயக்குவதிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார் இயக்குனர் மிஸ்கின்.

தற்போது இடைநடுவில் நிற்கும் "துப்பறிவாளன் 2" படத்தை நடிகர் விஷால் தானே இயக்கி நடிக்கவுள்ளார் என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எவையும் எங்கள் செவிகளை வந்தடையவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top