Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
24
உணவை வீணாக்கினால் அபராதம்

Sooriyan Gossip - உணவை வீணாக்கினால் அபராதம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

451 Views
உணவு வீணடிப்பதை தடுப்பதற்காக 10 கிராமுக்கு 100 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை தனியார் சொகுசு விடுதி ஒன்று கட்டாயமாக்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டம் மடிகேரியில் இப்பனி என்ற தனியார் சொகுசு விடுதி உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் மடிகேரிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணியர் இந்த விடுதியில் தங்குவார்கள்.விடுதி நிர்வாகம் தற்போது புதிய நடைமுறை ஒன்றை கட்டாயமாக பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளது. அது என்னவென்றால் விடுதியில் உணவு சாப்பிடுபவர்கள் 10 கிராம் உணவை வீண் செய்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்த விதிமுறையை பின்பற்றுபவர்களுக்கு மட்டும் சொகுசு விடுதியில் தங்க அறை வழங்கப்படும். இல்லை என்றால் அறை வழங்க முடியாது' என்று விடுதியின் முன் பகுதியில் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது.

இது குறித்து விடுதி நிர்வாகி கூறியபோது :வாடிக்கையாளர்கள் எவ்வளவு உணவு வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் ஆனால் வீணடிக்க கூடாது. வீணடித்தால் அந்த உணவை எடை போட்டு அதற்கேற்ப அபராதம் வசூலிக்கப்படும்.இந்த பணத்தை குழந்தைக்கு உணவளிக்கவும் என்ற உண்டியலில் வாடிக்கையாளர் மூலம் போட்டுக் கொள்வோம்.

அந்த பணத்தை கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்போம். வீணடித்த உணவை உதிர்ந்த இலைகளுடன் கலந்து இயற்கை உரம் தயாரிப்போம். இதன் மூலம் காய்கறிகள் கீரைகள் விளைவிப்போம். இங்கு தங்கும் பிரபலங்களும் இந்த விதிமுறை பொருந்தும் .

பல இடங்களில் உணவுகள் வீணாக்கப்படுவதை தடுக்கவும், அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்படியான நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top