Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
சர்ச்சையில் சிக்குவாரா நடிகை ராதிகா ஆப்தே......???

Sooriyan Gossip - சர்ச்சையில் சிக்குவாரா நடிகை ராதிகா ஆப்தே......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

602 Views
பொலிவூட் திரையுலகின் பிரபல முன்னணி நடிகையும், திருமணத்தின் பின்னரும் மிகச் சிறப்பாக திரை வானில் ஜொலிக்கும் நட்சத்திரமாக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே.
அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு ஊடக வெளிச்சத்தில் தன்னை எப்போதும் வைத்துக்கொள்ளும் நடிகை ராதிகா ஆப்தே, ஹொலிவூட் திரையுலகிலும் தனது தடம் பதிக்கும் வேலையை அவ்வப்போது மேற்கொண்டிருப்பதுடன், திருமணத்தின் பின்னர் கூட மிக கவர்ச்சியாக நடிப்பதற்கு பின்நிற்கவில்லை. இதனால், பொலிவூட் இயக்குனர்களின் நடிகைக்கான தேர்வு பட்டியலில் எப்போதும் இவரது பெயர் உள்ளடங்கத் தவறுவதில்லை.

இந்தநிலையில், அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பங்கெடுத்த நடிகை ராதிகா ஆப்தே, திரைத்துறை சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்திருக்கின்றார். திரைத்துறையில் நடிகைகளுக்கான நிலை பற்றி அவர் தனது கருத்தை கூறுகையில் "நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை. எப்போது வாய்ப்புகள் இருக்கும், எப்போது இல்லாமல் போகும் என்று தெரியாது. நல்ல படங்கள் அமைந்தால் நடிகையாக இன்னும் கொஞ்ச காலம் எங்களை ஞாபகம் வைத்து இருப்பார்கள். அந்த மாதிரி படங்கள் அமையாவிட்டால் மறந்து விடுவார்கள். நான் சினிமா துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது.

இந்த காலகட்டத்தில் இந்தியத் திரைப்படங்கள், இணைய தொடர்கள், சர்வதேச திரைப்படங்கள் என பல பக்கங்களிலும் திறமையை வெளிக்காட்டி வரவேற்பைப் பெற்றிருக்கின்றேன். இருந்தும், தொழில் ரீதியாக 'நாளைய பொழுது' பற்றிய பயம் எப்போதும் இருந்துகொண்டு தான் உள்ளது. இன்று உள்ள வாய்ப்பு, நாளை கிடைக்குமா? எனும் சந்தேகம் எப்போதும் என் உள்மனதை குடைந்துகொண்டே தான் இருக்கும்.

கிடைக்கும் வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு தொழில்துறை தான் நான் இருக்கும் திரைத்துறை. எப்போது எமது வாய்ப்புக்களுக்கான கதவு மூடிக்கொள்ளும்...? என்று எங்களது கதை முடியும் என்று தெரியாது. மாறுபட்ட வித்தியாசமான புதிய கதைக்கருவுடன் கூடிய படங்களும், கதாபாத்திரங்கள் அமைவதும், அப்படியான பாத்திரங்களில் தோன்றுவதும் உண்மையிலே மிக கடினமான விடயம். இருந்தும், நான் அதிர்ஷ்ட்டமானவள். எனக்கு நல்ல கதைகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதிய புதிய நல்ல திரைக்கதைகளுக்காகவே எதிர்பார்த்திருக்கின்றேன்.

வேறுபட்ட கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் அமைய வேண்டும். மாறுபட்ட நடிப்பை ஒவ்வொரு படங்களிலும் கொடுத்து ரசிகர்களை எப்போதும் எங்கள் பக்கம் வைத்திருப்பது முக்கியம். இல்லையெனில், மக்கள் எம்மை மறந்து விடுவார்கள். அவர்களது கவனம் வேறு திசைக்கு பயணித்துவிடும். இப்படியான பயம் எப்போதும் என் மனதில் எழுந்துகொண்டு தான் இருக்கிறது" என்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top