எந்த மொழி கதாநாயகியானாலும் அழகாக இருந்தால் தான் சினிமாவில் ஜெயிக்கமுடியும் என்பதால் நடிகைகள் சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது என்பது பெரிய விடயம் அல்ல இது அனைவரும் அறிந்த விடயமே.
பல முன்னணி நடிகைகள் கூட இதனை செய்துள்ளனர். பிரபல நடிகையும் கமலின் மகளுமாகிய ஸ்ருதிஹாசனும் அதில் ஒருவர்தான். அவர் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவொன்றிற்கு சிலர் முகத்தை பிளாஸ்டிக் என கிண்டல் செய்வது பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் "ஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேன். அதை சொல்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை" என கூறியுள்ளார்.