Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
02
பரபரப்பை கிளம்பியிருக்கும் 'அண்ணாத்த' திரைக்கதை - எதிர்பார்ப்பில் கோடம்பாக்கம்

Sooriyan Gossip - பரபரப்பை கிளம்பியிருக்கும் 'அண்ணாத்த' திரைக்கதை - எதிர்பார்ப்பில் கோடம்பாக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

513 Views
இயக்குனர் சிவாவின் அடுத்த படமாக 'சூப்பர்ஸ்டார்' ரஜினி நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் "அண்ணாத்த". ரஜினியின் 168வது திரைப்படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுவருகின்றது.
வரவிருக்கும் "அண்ணாத்த" படத்திற்கான எதிர்பார்ப்பு 'சூப்பர்ஸ்டார்' ரசிகர்களிடம் பெரிதாய் அதிகரித்துள்ளமைக்கு காரணம் இல்லாமலில்லை. ஏனெனில், இயக்குனர் சிவா இயக்கத்தில் முதன்முறையாக ரஜினி நடிக்க வெளியாகவிருக்கின்றது இந்தப் படம். அத்துடன், படத்தின் திரைக்கதை பற்றி வெளியான ஒரு செய்தி பரபரப்பை கிளப்பியிருப்பது 'சூப்பர்ஸ்டார்' ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகத்தினரிடமும் இந்தப் படம் பற்றிய ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

'தல' அஜித் நடித்து 'சூப்பர்ஹிட்' படமாக அமைந்த "விஸ்வாசம்" திரைப்படம் மட்டுமல்லாமல், "விவேகம்" மற்றும் "வீரம்" ஆகிய படங்களையும் இயக்கியவர் சிவா. இந்தநிலையில், "விஸ்வாசம்" பட திரைக்கதையை 'தல' அஜித்திடம் சொன்னபோது, தற்போது ரஜினி படிப்பில் படமாகிக்கொண்டிருக்கும் "அண்ணாத்த" படத்தின் கதையையும் அஜித்திடம் சொல்லியிருந்தார். இந்த இரண்டு கதையையும் கேட்ட 'தல' அஜித், "விஸ்வாசம்" பட கதையை தேர்ந்தெடுத்து நடித்திருந்தார். படம் பெரிய வெற்றியடைந்துவிட்டது.

தற்போது இதை பற்றிய செய்திகள் வெளியே கசிந்ததால் குஷியான 'தல' ரசிகர்கள், "அண்ணாத்த" பட திரைக்கதையை இயக்குனர் சிவா, 'தல' அஜித்தை மனதில் வைத்தே எழுதியிருந்ததாகவும், இப்போது அதே கதையில் 'சூப்பர்ஸ்டார்' ரஜினி நடிப்பதாகவும், இவற்றை வைத்துப் பார்க்கும்போது அடுத்த சூப்பர்ஸ்டார் ஆவதற்கு 'தல' அஜித் தான் தகுதியுடையவர் என்று துள்ளிக்குதிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல், இணையத்தளத்தையும் அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர் 'தல' ரசிகர்கள்.

இது இப்படியிருக்க, "அண்ணாத்த" படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பை கொல்கத்தாவில் நடத்த திட்டமிட்டிருப்பதாக சொல்கின்றது படக்குழு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top