Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
02
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!

Gossip News - உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,526 Views
உலகம் முழுவதும் 60 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவிவிட்டது. சீனாவில் மட்டும் 2,912 பேர் உயிரிழந்த நிலையில் பல்வேறு நாடுகளில் பலியானோரின் எண்ணிக்கையுடன் இணைந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,001 ஆக அதிகரித்துள்ளது.

60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரானாவுக்கு இதுவரை 88,375 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில், 7,608 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும், வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பாக போதிய ஆலோசனைகள் வழங்கவும் சீனா முன்வந்துள்ளது. இதற்காக மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்றையும் ஈரான் நாட்டிற்கு சீனா அனுப்பியுள்ளது. இந்த குழுவினர் ஈரானில் உள்ள மருத்துவர்களுக்கு கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது, உயிரிழப்பை தடுப்பது எவ்வாறு என பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

ஈரானுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் இத்தாலியில் 34 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் கொரானாவுக்கு 1,694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக நோய்த் தொற்று பரவி வருவதால் கலாச்சார நிகழ்வுகள், பொதுக்கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top