Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
02
காற்றின் மொழி பேசிய காதலன் வித்யாசாகரின் பிறந்தநாள் !!!

SooriyanFM Gossip - காற்றின் மொழி பேசிய காதலன் வித்யாசாகரின் பிறந்தநாள் !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

614 Views
காற்றின் மொழி ... என்று கனிந்த அசைவுகளுக்கு இசைகொடுத்த நல்ல இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள் இன்று.

எப்போதுமே எஸ்.ஏ ராஜ்குமார் என் இரசனைகளின் வட்டத்தில் முன்னின்றாலும், சிற்பி - ரஹ்மான் - வித்யாசாகர் - கார்த்திக் ராஜா போன்றோரின் பாடல்களையும், படங்களையும் இரசிக்க தவறியதில்லை.
மலரே மௌனமா ... அனைவருக்கும் தெரிந்த அடையாளம் என்றாலும், இந்தக் கலைஞனின் ஹிட் ஆகாத இனிமையான ரகப்பாடல்கள் ஏராளமுண்டு. அந்தப் பாடல்களெல்லாம் அவரது தனிப்புலமைக்கு என்றுமே அடையாளங்கள்தான். 

''பூமனம்'' என்ற படத்தில் தமிழில் அறிமுகமானவருக்கு அடுத்தடுத்தடுத்து படங்கள் ஹிட் ஆகவில்லை. தமிழிலும் தெலுங்கிலும் படங்கள் வெளியாகின. ஆனாலும், அவைகளால் எந்த இலாபமும் இவருக்கு கிட்டவில்லை. ஆனாலும், இந்த மனுஷன் சோர்ந்து போகவில்லை. மீண்டும் மீண்டும் வந்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்த தவறவில்லை. 

அப்படி வந்துகொண்டிருந்த தோல்விகளுக்கு நடுவில், ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் ஒரு தனியிடத்தைப் பெற்றுக்கொடுக்க, அதனைத் தொடர்ந்து கர்ணா வெளியாகிறது. அந்தப் படத்தில் தான் வித்யாசாகரின் மறுமுகம் தமிழ் சினிமாவிலும், இசையுலகத்திலும் தெரிய வருகிறது. 

மலரே மௌனமா எனும் காதலர்களுக்கான தேசிய கீதத்தை தமிழில் கொடுத்து ஹிட்டடிக்கிறார். அந்தப் பாடலோடு ''கர்ணா'' படத்தில் வந்த அத்தனை பாடல்களும், படத்தின் பின்னணி இசையும் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ் ஐ அள்ளிக் கொடுக்க, இவரது நிலை மாறுகிறது. 

அன்று தொடக்கம் அர்ஜுனின் ஆஸ்தான இசையமைப்பாளராக அடுத்தடுத்த படங்களிலும், அர்ஜுன் தனது சிபார்சினால் வித்யாசாகரை ஒப்பந்தம் செய்கிறார். 

ஒரே படத்தில், வித விதமான பாடல்களையும், புதிய புதிய இனிய குரல்களையும் அறிமுகம் செய்கிற யுக்தியை வித்யாசாகர் கையாண்டதோடு, ரஜினிகாந்த் தொடக்கம் கமல் ஹாசன் வரை, அனைவர் படத்திலும் இசைகொடுத்து தன்னை நிரூபித்திருக்கிறார் இந்த இசையின் அற்புதக் கலைஞன்.

நினைக்கும் நேரமெல்லாம் இவர் கொடுத்த காதல் மொட்டுக்கள் கான இரசம் சொட்ட, அவைகளெல்லாம் 90ஸ் கிட்ஸ் தேசிய கீதமாகிப்போனதும் சாதனையே!!

ஒரு படத்தில் ஒரு பாடல் மட்டும் ஹிட் ஆகி, பலருக்கும் சொகத்தைக் கொடுத்திருக்கையில், வித்யாசாகரின் படங்களில் வந்த எல்லா பாடல்களும் வெற்றிவாகை சூடின. 

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில், தாலாட்டும் காற்றே வா என்றும், திருமண மலர்கள் தருவாயா வேண்டும் விதவிதமான பாடல்களை ரசிக்கும்படி கொடுத்து ஹிட் அடித்து உச்சத்திலிருந்தவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். 

தல அஜீத் - தளபதி விஜய் என்று, அவர்களது படங்களிலும் இவரது இசை மட்டும் பாடல்கள் பயங்கர ரீச்சைக் கொடுத்தன. அதுவே இவருக்கு ஒரு இனிய அடையாளம். 

சில இசையமைப்பாளர்கள் மட்டுமே காலங் கடந்தும் நம்மிடையே ஒன்றாக கலந்திருப்பார்கள். அப்படியானவர்களில், வித்யாசாகரும் அவரது இசையும் நமக்கு என்றுமே தேசிய கீதம் தான்!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காற்றின் மொழி கொடுத்த காதலனே !!

Article - Rj Ramesh
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top