Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
03
இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கூந்தலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

SooriyanFM Gossip - இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கூந்தலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,295 Views
விட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இவை உங்கள் முடி உதிர்வைத் தவிர்த்து உறுதியான கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

நம்முடைய கூந்தலைப் பராமரிப்பதற்கு நாம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கின்றோம். ஆனாலும் அவை எமக்கு முழுமையான உத்தரவாதத்தை தருவதில்லை. எனவே இயற்கையான பல முறைகளும் இருக்கிறது. இருப்பினும் நீங்கள் இந்த உணவு வகைகளை உண்பதன் மூலம் உறுதியான கூந்தலைப் பெற முடியும்.

கரட்டில் விட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு. கரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன.

தினமும் உணவில் பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும். தோலுக்கு நல்ல நிறத்தையும், முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.

முட்டையில் புரோட்டீன், விட்டமின் பி12, இரும்புச்சத்து, உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை.

முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம் உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பயோட்டின் என்கிற விட்டமினும் உள்ளது.

பீன்ஸ், சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகின்றன. அடர்த்தியான உறுதியான கூந்தலைப் பெற இவ்வாறான சத்தான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். நல்ல பலனையும் பெறுவீர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top