Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
03
நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டேனா.....??? - நடிகை நஸ்ரியா விளக்கம்.

Sooriyan Gossip - நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டேனா.....??? - நடிகை நஸ்ரியா விளக்கம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

385 Views
கேரளத்திலிருந்து வந்து "ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களில் தனக்கும் ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகை நஸ்ரியா.
திரைத்துறையில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக்கொள்ள முன்னரே, பிரபல மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை கரம் பற்றிக்கொண்ட நடிகை நஸ்ரியா, திருமணத்தின் பின்னர் ஒரு சில வருடங்கள் திரைப்பக்கம் தலை காட்டாமலிருந்த நிலையில், "பெங்களூர் டேஸ்" திரைப்படத்தின் மூலம் மீள்வருகை தந்திருந்தார்.

"பெங்களூர் டேஸ்" படத்தில் தனது கணவரான பஹத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்த நஸ்ரியாவை, "ட்ரான்ஸ்" என்ற இன்னுமோர் புதிய படம் மீண்டும் நிஜ தம்பதிகளான இருவரையும் நிழலிலும் ஜோடி சேர வைத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

மல்லுவூட் எனப்படும் மலையாளத் திரையுலகில் உருவான "ட்ரான்ஸ்" என்ற திரைப்படம், அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்தநிலையில், குறித்த படத்தின் விளம்பரப்படுத்தல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார் நடிகை நஸ்ரியா. அப்போது, ஊடகத்துறையினரால் அவரது திரைத்துறை பயணம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, தனது நடிப்புத் தொழில் பற்றி நடிகை நஸ்ரியா கூறுகையில், "நான் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன் அவ்வளவுதான். இரண்டு வருட இடைவெளியை நான் தீர்மானிக்கவில்லை. ஒரு கதை என்னை ஆர்வப்படுத்தினால், நேரத்தில் பொருந்தினால், இதை நடிக்க வேண்டும் என்று யோசிக்க வைத்தால் நடிப்பேன். நான் ஒரு கதை கேட்கும்போது ஆழமாக யோசிக்க மாட்டேன். இது எனக்கு ஆர்வம் தருமா, தராதா என்றே யோசிப்பேன். அளவுக்கதிகமாக யோசிப்பதில்லை" என்கிறார் இந்த கேரளத்து அழகி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top