Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
கொரோனாவால் 'அண்ணாத்த'க்கு வந்த சோதனை - படப்பிடிப்பு ரத்து.

Sooriyan Gossip - கொரோனாவால் 'அண்ணாத்த'க்கு வந்த சோதனை - படப்பிடிப்பு ரத்து.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,193 Views
உலக மக்கள் அனைவரையும் அச்சத்திற்குள் ஆழ்த்தியுள்ள கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் ஆனது, 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும்  "அண்ணாத்த" படத்திலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. 
இயக்குனர் சிவா இயக்கத்தில் படமாகிக் கொண்டிருக்கும் "அண்ணாத்த" திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பை வட இந்திய மாநிலமான கொல்கத்தா மற்றும் புனே உள்ளிட்ட சில பிரதேசங்களில் நடத்துவதற்கு படக்குழு திட்டமிட்டிருந்தது.

இதுவரை ஹைதராபாத் நகரத்தில் நடைபெற்ற "அண்ணாத்த" படப்பிடிப்பு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. இதன் காரணமாக, முன்னரே திட்டமிடப்பட்டிருந்த வட மாநில பிரதேச படப்பிடிப்புப் பயணம் நிறுத்தப்பட்டது.

கிராமத்துப் பின்னணி கொண்ட கதையம்சமாக "அண்ணாத்த" திரைப்படம் உருவாகி வருவதால், அடுத்த கட்டப் படப்பிடிப்பையும் ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் படமாக்க இயக்குனர் சிவா முடிவு செய்துள்ளார். அதனால், படத்தின் காட்சிகளுக்குத் தேவையான பின்னணியை 'செட்' அமைத்து தத்ரூபமாக கண்முன் கொண்டு வரும் வேலையில் கலை இயக்குனர் குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்று தயாரிப்புத் தரப்பு கூறுகின்றது.

இது இப்படியிருக்க, உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரத்திலும், ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதிலும் ஆட்டம் காட்டியுள்ள கொரோனா வைரஸ், திரைப்படத் தயாரிப்பிலும் கஷ்டத்தை கொடுத்துள்ளமையை நினைத்து கோடம்பாக்கம் கவலையில் ஆழ்ந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top