Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
09
சர்ச்சைகளுக்குள் விரும்பியே சிக்கிக்கொள்ளும் 'திரௌபதி' இயக்குனர் - சொல்வது என்ன...???

Sooriyan Gossip - சர்ச்சைகளுக்குள் விரும்பியே சிக்கிக்கொள்ளும் 'திரௌபதி' இயக்குனர் - சொல்வது என்ன...???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

286 Views
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரைக்கும் சிறிது காலத்துக்கு ஒருமுறை ஏதோ ஒரு கதைக்கருவை மையமாகக் கொண்டமைந்த படங்கள் அடுத்தடுத்து திரை காண்பது வழமையாகி வருகின்றது.
யாரோ ஒரு இயக்குனரின் சிந்தனையில் உதித்த வேறுபட்ட கதைக்கருவில் அமைந்த ஒரு படம் திரைக்கு வந்து, அந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து வணிக ரீதியிலும் வெற்றியடைந்து விட்டால், அடுத்தடுத்து அதேபோன்று பல படங்கள் வெளிவந்து ரசிகர்களை சலிப்படையச் செய்து, வசூலிலும் மோசத்தை ஏற்படுத்தி தயாரிப்பாளர்கள் தம் தலையில் துண்டு போட்டுக்கொள்ளும் அளவில் தான் முற்றுப் பெறும்.

தமிழில் சிறிது காலம் 'த்ரில்லர்' கதைகளாக, திகிலூட்டும் பேய் கதைக்கருவை கொண்ட பல படங்கள் அடுத்தடுத்து வெளிவந்திருந்தன. அந்த இடத்தை தற்போது சாதீய பிரச்சனையை மையமாகக் கொண்டமைந்த திரைக்கதைகள் தமதாக்கியுள்ளன. அந்தவகையில், இயக்குனர்கள் இருதரப்பாக நின்று தமது படைப்புக்களால் மோதிக்கொள்ளும் கலைப்போர் திரையில் நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில், இயக்குனர் மோகன்.ஜி படைப்பில் பல தடைகள் தாண்டி அண்மையில் வெளியான "திரௌபதி" திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், முதலுக்கு மோசமில்லாமல் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருப்பதாக தயாரிப்புத் தரப்பும், திரையரங்க உரிமையாளர்கள் பக்கமிருந்தும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது இப்படியிருக்க, தனது அடுத்த திரைப்படம் பற்றிய செய்தியை ரசிகர்களுடன் டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக பகிர்ந்துகொண்டிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. அந்தப் பதிவில், "திரெளபதி-ன்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான். விரைவில் அறிவிப்பு வரும். காத்திருங்கள்” என்று தெரிவித்திருக்கின்றார், சலசலப்பிற்கு அஞ்சாத படைப்பாளன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top